???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   செப்டம்பர்   15 , 2019  22:46:05 IST

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் வழியாக பாயும் கோதாவரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்நிலையில், இம்மாவட்டத்தில் உள்ள தேவிப்பட்டினம் அருகாமையில் கண்டி போச்சம்மா ஆலயத்தில் இருந்து பாப்பிகொன்டலு என்ற சுற்றுலாத்தலத்துக்கு ஆற்றின் வழியாக 60-க்கும் அதிகமானவர்கள் ஆந்திர மாநில அரசின் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகில் சென்று கொண்டிருந்தனர்.

ஆற்றுச்சுழலில் சிக்கிய அந்தப் படகு கச்சுலூரு பகுதியின் அருகில் திடீரென்று நிலைதடுமாறி கவிழ்ந்தது. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்பு படையினர் ஆற்றுக்குள் மூழ்கி கொண்டிருந்தவர்களில் 23 பேரை உயிருடன் காப்பாற்றி, கரை சேர்த்தனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. பலரை தேடும் பணி நடந்து வருகிறது.

வெள்ளம் காரணமாக ஆற்றில் படகுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தடையை மீறி படகு இயக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், படகில் 23 பேருக்கு மட்டுமே பாதுகாப்பு உடை இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...