அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

50 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பார்வதி தேவி சிலை கண்டுபிடிப்பு!

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   11 , 2022  23:29:47 IST

கும்பகோணத்தில் தொலைந்து போனதாக கருதப்பட்ட பார்வதி தேவியின் சிலை 50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் நகரத்தில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
 
கும்பகோணத்தில் தண்டன்தோட்டம் என்ற ஊரில் இருக்கும் நந்தபுரீஸ்வரர் சிவன் ஆலயத்தில் இருந்து பார்வதி தேவி சிலை ஒன்று காணாமல் போனது.
 
தமிழ்நாட்டில் கோவில்களில் நகரமாக, நவக்கிரக தலமாக கூறப்படும் கும்பகோணத்தில் இருந்த பார்வதி தேவியின் சிலை நியூயார்க் நகரத்தில் போன்ஹாம்ஸ் ஏல வீட்டில் கண்டறியப்பட்டது என்று சிலை கடத்தல் பிரிவு, CID துறை கடந்த திங்களன்று செய்தி வெளியிட்டது. தொலைந்து போன இந்த சிலை சோழர் காலத்தைச் சேர்ந்தது என்றும், இது ஒரு செம்பு சிலை என்றும் மதிப்பீடு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த சிலையின் உயரம் 52 சென்டிமீட்டர் மற்றும் இந்திய ரூபாயில் இந்த சிலையின் மதிப்பு, 1.6 கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டது.
 
1971 ஆம் ஆண்டு சிலை தொலைந்து போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக விசாரணை நிலுவையில் இருந்ததை அடுத்து, பிப்ரவரி மாதம் 2019 ஆம் ஆண்டு கே. வாசு என்பவர் கோயில் சிலை கடத்தல் பிரிவில் புகார் அளித்து, FIR பதிவு செய்யப்பட்டது. அந்த புகாரின் பேரில்தான் இந்த சிலை காணாமல் போனது தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டது. சிலை கடத்தல் பிரிவு இன்ஸ்பெக்டர் எம் சித்ரா அவர்கள் இந்த விசாரணையை மேற்கொண்டு, சோழர் காலத்தைச் சேர்ந்த பார்வதி தேவி சிலைகள் எந்தெந்த அருங்காட்சியகங்கள் மற்றும் ஏல வீடுகளில் இருந்தன, காட்சிக்கு வைக்கப்பட்டன என்ற விசாரணையைத் தொடங்கினார்.
 
தென்னிந்தியாவின் பெரும்பாலான ஆலயங்களில் பார்வதி தேவி அல்லது சிவபெருமானின் மனைவியான உமா தேவி என்று வழிபடப்படும் அம்மன், நிற்கும் நிலையில்தான் சிலைகள் காணப்படுகின்றன. இந்த சிலையில் அம்மன் தலையில் கிரீடம், ஆபரணங்கள் அணிந்து காணப்படுகின்றன. சிலையை மீட்டு தமிழ்நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான எல்லா ஆவணங்களும் தயாராக உள்ளதாக சிலை பிரவு CID, காவல்துறை DGP, ஜெயந்தி முரளி கூறியுள்ளார்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...