செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
சாதிகளை உருவாக்கியது கடவுள் இல்லை: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
சாதி கட்டமைப்பு குறித்து காட்டமான கருத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். துறவி ஷிரோன்மணி ரோஹிதாசின் 647ஆம்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
சாதிகளை உருவாக்கியது கடவுள் இல்லை: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
Posted : திங்கட்கிழமை, பிப்ரவரி 06 , 2023 09:40:40 IST
சாதி கட்டமைப்பு குறித்து காட்டமான கருத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். துறவி ஷிரோன்மணி ரோஹிதாசின் 647ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்று மோகன் பகவத் உரையாற்றினர். அப்போது நாட்டின் சாதிய கட்டமைப்பு குறித்து பேசினார்.
அவர் கூறியதாவது, "நாம் நமது வாழ்க்கையை வாழத் தொடங்கும் போதே சமூகத்தின் மீதான பொறுப்பும் கூடவே நமக்கு வருகிறது.நாம் அனைவரும் சமூகத்தின் உயர்ந்த நலனுக்காக வேலை செய்கிறோம். அப்படி இருக்க அந்த வேலையில் பெரிய வேலை, சிறிய வேலை என்ற பாகுபாடை பார்க்க முடியும்.
நம்மை படைத்த கடவுளின் முன் நாம் அனைவரும் சமமானவர்கள். சாதி பேதம் என்று ஏதும் இல்லை. இந்த சாதி பாகுபாடை பண்டிதர்கள் தான் உருவாக்கினார்கள். அது தவறானது. நீங்கள் முன்னேற்றத்திற்காக உழைத்து சமூகத்தை ஒற்றுமையுடன் வைத்திருங்கள். அது தான் மதத்தின் சாரம்.
எந்த விதமான வேலை செய்தாலும் அந்த வேலைக்கு மரியாதை தர வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய மரியாதை தராததே வேலையின்மைக்கு முக்கிய காரணம். எல்லாரும் வேலைக்கு பின்னாள் ஓடுகிறார்கள். அரசால் 10 சதவீத வேலைதான் உருவாக்க முடியும்.மற்றவர்கள் 20 சதவீத வேலையை உருவாக்க முடியும். எந்த சமூகமும் 30 சதவீதத்தை தாண்டி வேலைகளை உருவாக்க முடியாது. எனவே, அனைத்து விதமான வேலைகளையும் மதிப்புடன் செய்யும் சூழலை உருவாக்க வேண்டும்."இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.
|