![]() |
கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு!Posted : சனிக்கிழமை, பிப்ரவரி 27 , 2021 17:13:41 IST
கோவில்களை தமிழக அரசு பக்தர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கோரிக்கை வைத்திருந்த நிலையில் இதற்கு நடிகர் சந்தானம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டிருந்த வீடியோவில், தமிழகத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க கோவில்களில் பூஜை செய்வது, அவற்றை சரிவர பராமரிப்பது மற்றும் பாதுகாப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளும் ஒரே ஒரு நபர் மட்டுமே செய்கிறார். இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்கள் அழிந்துவிடும் என்றும் எச்சரிகை விடுத்துள்ளார்.
மேலும், கோவில்கள் பக்தர்களிடமிருந்தால் அதை அவர்கள் பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள் எனவும், மத சுதந்திரத்தில் அரசு தலையிடக் கூடாது எனவும், தமிழ்நாட்டில் இருக்கும் கோவில்கள் அரசாங்கத்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சத்குருவின் கருத்திற்கு முழுமையாக ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் சந்தானம், பல கோவில்களில் ஒரு கால பூஜை கூட செய்வதில்லை என்பதைப் பார்க்க வருத்தமளிக்கிறது. பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் மிகக் குறைவானவர்கள் செய்துவிடுவார்கள் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
|
|