???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காதலுடன் வாழ்ந்துவந்த மாணவி சடலமாக மீட்பு - கொலையா தற்கொலையா?

Posted : புதன்கிழமை,   ஜுலை   24 , 2019  02:05:04 IST


Andhimazhai Image
ஈரோடு மாவட்டம் பாலவாடியை சேர்ந்த கால்நடை மருத்துவ மாணவி ஒரத்தநாட்டில் உள்ள வீட்டில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் அந்த மாணவியின் காதல் கணவரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
 
பாலவாடி கிராமத்தை சேர்ந்த அந்த மாணவி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவிக்கு முகநூல் மூலம் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(25) என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
 
இது காதலாக மாறி இருவரும் வீட்டுக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்துக்கொண்டு, ஒரத்தநாட்டில் தனி அறை எடுத்து தங்கியுள்ளனர். தான் ஒரு பொறியாளர் என கூறி மாணவியை திருமணம் செய்துகொண்ட சதீஷ்குமார் அவரை ஏமாற்றியுள்ளார்.
 
மேலும், குடிப்பழக்கத்திலும் மூழ்கியிருந்த சதீஷ்குமார் - மாணவி இடையே சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், ஒரே அறையில்  சதீஷ்குமாருடன் இருந்த மாணவி நேற்று தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார். அவர் அருகே சதீஷ்குமார் மது போதையில் கிடந்துள்ளார். சதீஷ்குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களிடையேயான இந்த உறவு குறித்த தகவல் முழுதாக வெளிவந்திருக்கிறது.
 
இதனிடையே, மகள் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்துவருவதாக நினைத்துக்கொண்டிருந்த மாணவியின் பெற்றோருக்கு இந்த தகவல் நேற்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவை எதையுமே அறிந்திராத அவரது பெற்றோர் கதறியதோடு, சதீஷ்குமார்தான் தமது மகளை அடித்து தூக்கில் மாற்றியதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
 
 

English Summary
Girl dead in orathanadu

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...