???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116! 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விமானத்தை காதலிக்கும் பெண்... விரைவில் திருமணம்!

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   15 , 2019  03:49:03 IST


Andhimazhai Image

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 30 வயது பெண் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலில் விழுந்துள்ளார். இதில் என்ன பஞ்சாயத்து? அவர் காதலிப்பது ஒரு போயிங் விமானத்தை.

 

ஜெர்மனியின்  தலைநகரமான பெர்லினை சேர்ந்தவர் மிச்சேல். இவர் போயிங் 737-800 என்ற பயணிகள் ஜெட் விமானத்தை கடந்த 5 வருடங்களாக காதலித்து வருவதாகக் கூறுகிறார். முதல் முதலாக இந்த விமானத்தில் பயணம் செய்ய ஏறியபோதிலிருந்தே இதைக்காதலிக்கத் தொடங்கிவிட்டாராம்.

 

 

டார்லிங் என்று தன் ’காதலனை’ அழைக்கிறார். விமானத்தைக் காதலிப்பது சிரமம். அதில் பயணம் செய்யும்போதோ அல்லது அது ஓய்வாக நிறுத்தி வைத்திருக்கும்போதோதான் அதனுடன் இருக்க முடியும். ஐந்து ஆண்டுகள் கழித்து அந்த விமானத்தை ஓய்வாக நிறுத்தி இருந்தபோது கடந்த மே மாதம் இந்த விமானத்துடன் கொஞ்ச நேரம் அவர் செலவழிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம்.

 

 இந்த சிரமத்தால் அவர் வீட்டிலேயே அந்த விமானத்தின் மாதிரியை வடிவமைத்து அத்துடன் வாழ்ந்து வருகிறார். அவரது முகநூலில் விமானத்தை முத்தமிடும் படங்கள் நிரம்பி உள்ளன.

 

இந்த விமானத்தை திருமணம் செய்வதே எனது ஆசை என்று மிச்சேல் கூறியுள்ளார்.

என்னடா.. விமானத்தை எப்படி காதலிக்க முடியும் என்று நீங்கள் யோசிக்கலாம். இதுபோன்று பொருட்கள் மீது காதல் ஏற்படும் மனநிலையை objectophilia என்பார்கள். இவரைப்போல இதற்கு முன்பாக பலருக்கு இதே சிக்கல் இருந்திருக்கிறது.

2009-ல் எரிக்கா ஈபிள் என்பவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தோன்றி தான் புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தை மணம் செய்துகொண்டதாகக்கூறினார். எரிக்கா  அமெரிக்காவின் புகழ்பெற்ற வில்வித்தை வீராங்கனை.

 

 

தன் பெயருக்குப் பின்னால் ஈபிளைச் சேர்த்துக்கொண்ட இவர் தன்னைப் போல உயிரற்ற பொருட்களைக் காதலிப்பவர்களுக்காக ஒரு அமைப்பையே நடத்துகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

 

அமெரிக்காவில் உள்ள சுதந்தர தேவி சிலையை  காதலிப்பதாக  அமண்டா லிபெர்டி என்பவர் 2012-ல் கூறினார். சமீபத்தில் அவர் ஒரு சாண்டிலியர் சரவிளக்கைத் திருமணம் செய்துகொள்ளப்போவதாகக் கூறி இருக்கிறார்.

 

 ரெய்னர் டிலைனி என்பவர் அடோனிஸ் என்ற கிரேக்க கடவுளின் பளிங்கு சிலையைக் காதலிப்பதாகக் கூறி சர்ச்சையைக்கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

 
என் பைக்கைக் காதலிக்கிறேன் என இனி யாரேனும் சொன்னால் அவருக்கு  objectophilia இருப்பதாக இனி நாமும் சொல்லலாம்!

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...