???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி! 0 அனுமதி இல்லாமல் உள்ளே வரக்கூடாது: சிபிஐக்கு ஆந்திர அரசு தடை 0 கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் பிரதமர் மோடி விசாரிப்பு 0 புயலில் மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு 0 கஜா புயலால் 12,000 மின் கம்பங்கள் பாதிப்பு: அமைச்சர் தங்கமணி தகவல் 0 கஜா புயல்: 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை 0 கஜா புயல் பாதிப்புகளை வேதாரண்யம் செல்கிறார் மு.க. ஸ்டாலின் 0 புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: ராமதாஸ் 0 பத்து மாவட்டங்களை சூறையாடிய கஜா புயல்! 0 கஜா புயலுக்கு இதுவரை 20 பேர் பலி 0 கரையைக் கடந்தது கஜா புயல்! 0 கஜா புயல்: அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து! 0 அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி ‘நியூஸ் ஜெ’ தொடக்கம்! 0 சபரிமலையில் பெண்களுக்கு தனியாக நாட்களை ஒதுக்க கேரள அரசு திட்டம் 0 இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாகிஸ்தானில் வளர்ந்த கீதா தாயகம் திரும்பினார்!

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   26 , 2015  21:56:54 IST


Andhimazhai Image

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானின் லாகூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சம்ஜவுதா விரைவு ரயிலில் தன்னந்தனியாக அமர்ந்திருந்த சிறுமி கீதாவை அந்நாட்டு ராணுவ வீரர்கள் மீட்டனர்.வாய் பேச முடியாத, காது கேளாத அந்தச் சிறுமிக்கு அப்போது 7 அல்லது 8 வயது இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது. இதன் பின்னர், "எதி' என்ற அறக்கட்டளையின் நிறுவனர் பில்கீஸ் எதி, அந்தச் சிறுமியை தத்தெடுத்தார். தனது பேரக் குழந்தைகளோடு, கடந்த 15 ஆண்டுகளாக கீதாவையும் அவர் வளர்ந்து வந்தார்.

இந்நிலையில், ஹிந்தி நடிகர் சல்மான் கான் நடித்த "பஜ்ரங்கி பாய்ஜான்' என்ற திரைப்படம் அண்மையில் வெளியானது. பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்து தவறுதலாக பிரிந்து தவிக்கும் தாயையும், குழந்தையையும் நாயகன் ஒன்று சேர்த்து வைப்பதாக அந்தப் படத்தின் கதை அமைந்திருந்தது. "பஜ்ரங்கி பாய்ஜான்' படத்தின் எதிரொலியாக, சிறு வயதில் காணாமல் போன கீதா என்ற இந்தியப் பெண் பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டதன் பேரில், பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் ராகவன் கடந்த ஆகஸ்ட் மாதம் கீதாவைச் சந்தித்தார். பின்னர், கீதாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தயாராகின. இந்நிலையில், திங்கள்கிழமை காலை பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் இருந்து எதி அறக்கட்டளை நிர்வாகிகள் 5 பேருடன் இணைந்து கீதா இந்தியாவுக்குப் புறப்பட்டார். முன்னதாக, தன்னை அன்புடன் பராமரித்து வளர்த்த பாகிஸ்தான் மக்களுக்கு நன்றியை வெளிப்படுத்துவதாக அவர் சைகை மொழியில் தெரிவித்தார்.

முன்னதாக, கீதா பாகிஸ்தானில் வசிக்கும் செய்தி வெளிவந்தவுடன், அவரது பெற்றோர் பிகார் மாநிலத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. சிறு வயதில் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பார்த்து கீதா அடையாளம் கண்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தில்லி திரும்பிய கீதாவை வரவேற்க அவரது பெற்றோர் எனக் கருதப்படும் ஜனார்த்தன் மஹதோ தம்பதியர் தங்களது மகன் மனோஜுடன் வந்திருந்தனர். பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு நடுவே, கீதாவை அவர்கள் தாமதமாகவே சந்திக்க முடிந்தது. ஆனால், திடீர் திருப்பமாக மஹதோ தம்பதியர் தனது பெற்றோர் இல்லை என கீதா மறுப்பு தெரிவித்தார்.

இதனிடையே, மத்திய அரசு ஏற்கெனவே செய்துள்ள ஏற்பாட்டின்படி, கீதாவின் மரபணுவையும், மஹதோ தம்பதியரின் மரபணுவையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பரிசோதனை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற உள்ளது. கீதாவைச் சொந்தம் கொண்டாடுபவர்கள் உண்மையிலேயே அவரது பெற்றோர்தானா? என்பது இந்தப் பரிசோதனையின் முடிவில் தெரியவரும்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...