???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் 0 இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை 0 உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் 0 வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி 0 மேலும் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று! 0 கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் பரிதாப மரணம்! 0 என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் ஆகஸ்டு 16-ந்தேதி தொடங்கலாம்: ஏ.ஐ.சி.டி.இ. 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது! 0 பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது! 0 அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி 0 தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு 0 தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது 0 சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது! 0 சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காயத்ரி ரகுராமின் ட்விட்டர் பக்கம் முடக்கம்!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   19 , 2019  21:49:45 IST

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாட்டில் பேசிய திருமாவளவன்,  "அயோத்தி தீர்ப்பு குறித்து தனது விமர்சனத்தை முன் வைத்தார். அப்போது பேசிய அவர், பாபர் மசூதி இருந்த இடத்தில் தொல்லியல்துறை நடத்திய ஆராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் அந்த ஆய்வில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால் அந்தக் கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும், கூம்பு போல அதன் அமைப்பு இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்றும் பேசினார். அதற்கான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் நடிகையும், பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் கடுமையான வார்த்தைகளில் திருமாவளவனை விமர்சித்ததோடு, இந்து மதத்தை விமர்சித்த திருமாவளவனை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடியுங்கள் என்று பதிவிட்டிருந்தார். அதேசமயம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது விதிகளை மீறியதாக நடிகை காயத்ரி ரகுராமின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...