![]() |
நரகாசூரன் பட இயக்குநருடன் மோதல்: விளக்கமளித்தார் கௌதம் மேனன்!Posted : வெள்ளிக்கிழமை, மார்ச் 30 , 2018 13:41:08 IST
நரகாசூரன் பட இயக்குநர் கார்த்திக் நரேனுக்கும், படத்தின் தயாரிப்பில் பங்கு பெற்ற இயக்குநர் கௌதம் மேனனுக்கும் இடையே நிகழந்த மோதல் போக்கு தொடர்பாக கௌதம் மேனன் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "நரகாசூரன் திரைப்படம் சார்ந்து நல்ல விஷயங்கள் பல நடந்துகொண்டிருந்தன. ஆனால், இயக்குநர் கார்த்திக் நரேனின் ட்விட்டர் பதிவால் நான் வருத்தமுற்றேன். அதற்கு பதிலளிக்கும் வகையில்தான் நான் பதில் ட்வீட் செய்தேன். ஆனால், நான் அதனைச் செய்திருக்கக்கூடாது.அதற்காக கார்த்திக்கிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். நரகாசூரன் படத்தின் லாபத்தில் நான் ஐம்பது சதவீத பங்கு கேட்கவில்லை. இந்தப் படத்தில் எனக்கு எந்தவித பங்கும் இல்லை என்பதும் தெரியும். நான் இந்த படத்திலிருந்து விலக வேண்டும் என கார்த்திக் விரும்பினால் நான் மகிழ்ச்சியாக விலகிக்கொள்வேன். சில தகவல் தொடர்பின்மையாலேயே கார்த்திக்கின் கோபம் வெளிப்பட்டிருக்கிறது. நரகாசூரன் சந்தித்த பிரச்சனைகளை அனைத்து திரைப்படங்களும் சந்தித்துள்ளன. எல்லா தயாரிப்பாளர்களும் இதனைக் கடந்தே வந்திருப்பார்கள். பட வேலைகள் அனைத்தும் முடிந்தபின் படம் ரிலீஸ் தேதி குறித்து முடிவெடுக்கப்படும். எங்கள் இருவருக்கிடையே தவறாக புரிந்துகொள்ளப்பட்ட சில விஷயங்கள் குறித்து நாங்களே பேசி தீர்த்துக்கொள்வோம்.”
|
|