???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: ஹர்ஷவர்தன் 0 விவசாயிகளை பாதிக்கும் மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா 0 நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் இனி ஆலோசிக்கவேண்டாம்: புதிய சட்ட திருத்தம் 0 சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்; வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக 0 அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா நிறைவேறியது 0 தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’: முதலமைச்சர் 0 பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30 தீர்ப்பு! 0 மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி 0 கிசான் முறைகேட்டில் ஈடுபட்ட யாரும் தப்பிக்கமுடியாது: வேளாண்துறை அமைச்சர் 0 திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் தமிழக அரசு அறிவிப்பு 0 ஒகேனக்கல்லில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு 0 அண்ணா பல்கலைகழக தேர்வு அட்டவணை வெளியீடு 0 தன்பாலின திருமணங்களுக்கு அரசு அங்கீகாரம் இல்லை: மத்திய அரசு 0 செப்டம்பர் 24ம் தேதி நெட் தேர்வு! 0 'மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதிக்காது'
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆன்லைனில் கஞ்சா விற்பனை - சென்னையில் அதிர்ச்சி!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   10 , 2020  05:28:12 IST


Andhimazhai Image

சிலநாட்களுக்கு முன்பாக உணவு டெலிவரி செய்யும் பையன் ஒருவனிடம் சிலர் ஒரு பார்சலைக் கொடுப்பதை போலீசார் பார்த்தனர். எப்போதும் பார்சலை டெலிவரி பையன் தானே கொடுப்பான்? இது என்ன வாடிக்கையாளர் கொடுக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டு பிடித்து விசாரித்தால் ஆச்சரியமும் அதிர்ச்சியும் காத்திருந்தது.

அது ஆன்லைனில் கஞ்சா டெலிவரி. உணவு சப்ளை செய்யும் பையன்கள் மூலமாக ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு கஞ்சா டெலிவரி செய்யும் பிரமாதமான நெட்வொர்க். பார்சல் கொடுத்த வாடிக்கையாளர்கள் அளித்தது கஞ்சா பார்சல். அவர்கள் இருவரும் ஐடி துறை ஊழியர்கள். இவர்கள் வீட்டை சோதனை போட்டதில் பத்துகிலோ கஞ்சா சிக்கியது.

டிஜிட்டல் முறையில் கஞ்சா விற்பனை செய்யும் சம்பவங்கள் சென்னையில் அதிகரித்துக்கொண்டே போவதாக போலீஸார் சொல்கிறார்கள். நிழல் உலக விற்பனையில் காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்த கஞ்சா விற்பனை இப்போது உணவு விநியோக முகவர்கள் உருவில், வாட்ஸப் குழுக்கள், மின்னஞ்சல் மூலமாக படுவேகமாக நடந்துக்கொண்டிருக்கிறது.

வாட்ஸப் குழக்கள் மூலமாக கஞ்சா விற்பனையை மேற்கொள்ளும் கும்பல், உணவு விநியோக முகவர்களைபோல் விநியோகிப்பதை சாதகமாக கருதுகிறது. காரணம், உணவு விநியோக முகவர்கள் பெரும்பாலும் காவல்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்பதுதான்.
சென்னை  காவல்துறை ஆணையாளராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்ற பிறகு கஞ்சா வேட்டை அதிகரித்து தொடர்ச்சியாக நிறைய பேர் பிடிபட்டு வருகிறார்கள். வழக்கமான கஞ்சா வியாபாரிகள் மட்டுமல்லாமல் இப்படி டிஜிட்டல் வியாபாரிகளும் இத்தொழிலில் இருப்பது வியப்பு. சென்னையில் இத்தகைய முறையில் கஞ்சா விற்பனை செய்தவர்கள் பிடிபட்டது இது மூன்றாவது முறை என்கிறது காவல்துறை தரப்பு. இந்த கும்பல் வாட்ஸப் குழக்கள் மூலம் தீவிரமாக செயல்படுகிறது. புதிய வாடிக்கையாளர்களுக்கு மாதிரி சரக்கை வழங்குவது, புதிய நபரை வாடிக்கையாளர் வளையத்திற்கு கொண்டுவந்தால் 5 முதல் 10 சதவீதம் சலுகை தருவது போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களும் இதில் உண்டு.

நவீன தொழில்நுட்பங்களை கையாள்வதில் திறன்மிக்கவர்களாக உள்ள மென்பொருள் துறையை சார்ந்த பலர் கஞ்சா விற்பனை குழுக்களில் பல புதிய உத்திகளை முயற்சிக்கிறார்கள். மின்னஞ்சல் மூலம் ஆர்டர் செய்வது, நேரடி தொடர்பை தவிர்க்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூகள் மேப் மூலம் பொதுஇடம் ஒன்றை விநியோக தளமாக ஏற்படுத்தி தருவது போன்ற வழிமுறைகள் இதில் ஏராளம். கஞ்சா எனும் சொல்லை பயன்படுத்தாமல் பல்வேறு ரகசிய குறியீடுகளையும் வைத்திருக்கிறார்கள். பொட்லம், தம், கிசா போன்ற சொற்கள் கஞ்சாவை குறிக்க புழக்கத்தில் உள்ளன.

சென்னையில் விற்பனையாகும் கஞ்சா ஆந்திர - ஒரிசா எல்லை பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகின்றன. அங்கிருந்து சில விவசாய பண்ணைகளில் உலர்த்தப்படும் கஞ்சா, அப்போதைய சூழலுக்கு ஏதுவான போக்குவரத்து முறைகளால் முகவர்களின் கைக்கு வருகிறது என்கிறார்கள் காவல்துறையினர்.

ரகசிய குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா விற்பனை இப்போது படித்த இளைஞர்களின் தொழில்நுட்ப அறிவின் மூலம் டிஜிட்டல் முறையில் கைமாறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...