???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்! 0 கரூரில் கமல்ஹாசனை நோக்கி செருப்பு, முட்டை வீச்சு! 0 கோவில் கல்வெட்டில் தேனி எம்.பி. ஆனார் ஓபிஎஸ் மகன்! 0 கமல் முன்ஜாமின் கோரிய மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு! 0 மருத்துவ படிப்படிகளுக்கான கலந்தாய்வு: ஜூன் 26ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு! 0 இந்தியாவில் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர்   11 , 2018  21:24:46 IST

தீவிர புயலாக வலுப்பெற்று வரும் கஜா புயல் வரும் 15-ம் தேதி சென்னை - நாகை இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வடகிழக்கு பருவமழை தொடங்கி 10 நாட்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், தற்போது தான் முதல் புயல் உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இப்புயலுக்கு இலங்கை பரிந்துரைத்த பெயரான கஜா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
கஜா என்றால் யானை என்று பொருள்படும். நேற்றிரவு நிலவரப்படி இப்புயல் மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 880 கிலோ மீட்டர் தொலைவிலும் இப்புயல் மையம் கொண்டுள்ளது. வரும் 24 மணி நேரத்தில் வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும் கஜா பின்னர் வலுக்குறைந்த நிலையில் சென்னை - நாகை இடையே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அதே நேரத்தில் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மிக கனமழை முதல் அதிக னமழை வரையிலும் பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 20 சென்டி மீட்டருக்கு அதிகமான மழை பெய்யக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...