???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது! 0 சலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு 0 பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கkகோரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு 0 சென்னையில் பைக்கில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் 0 பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி 0 இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது!

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   12 , 2018  23:05:27 IST

14-ம் தேதி இரவு முதல், புயல் கரையைக் கடக்கும்வரை தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
 
கஜா புயல் தமிழகத்தை நெருங்கி வருவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது, அவர் கூறியதாவது: கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 820 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்தப் புயலானது கடலூர் மற்றும் பாம்பன் இடையே வரும் 15-ம் தேதி முற்பகல் கரையைக் கடக்கக்கூடும்.
 
தற்போதைய நிலவரப்படி 14-ம் தேதி இரவு முதல், புயல் கரையைக் கடக்கும்வரை தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சமயங்களில் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசலாம்.
 
தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும். நாகை, சென்னை, காரைக்கால் ஆகிய இடங்களில் இயல்பைவிட ஒரு மீட்டர் அளவுக்கு கடல் நீர்மட்டம் உயரக்கூடும் என்றார் பாலசந்திரன்.
 
இதனிடையே புயலை முன்னிட்டு பாம்பன், நாகை, கடலூர், காரைக்கால், புதுச்சேரி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...