???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி! 0 ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு 0 எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து செயல்பாட்டுக்கு அரசு உதவும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் 0 "ஆளுநர் மௌனம் காப்பது ஏன்?": அற்புதம் அம்மாள் கண்ணீர் 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கஜா புயல்: 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   16 , 2018  07:52:12 IST

கஜா புயல் தற்போது திண்டுக்கல் பகுதியில் நிலை கொண்டுள்ளதாகவும், பிற்பகலில் முழுவதுமாக புயல் தமிழகத்தை விட்டு கேரளாவை நோக்கி நகர்ந்துவிடும் என்று சென்னை மண்டல ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தை அச்சுறுத்தி வந்த கஜா புயல் நேற்று நள்ளிரவில் கரையை கடந்துள்ளது. இதனால், மத்திய கடலோர மாவட்டங்களில் புயல் காற்றுடன் கனமழை பெய்தது. சூறைக்காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதுவரை 15 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் தற்போது திண்டுக்கல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
 
செய்தியாளர்களை சந்தித்த சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், “திண்டுக்கலில் நிலை கொண்டுள்ள கஜா புயல் இன்னும் இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தை முழுமையாக கடந்து கேரளாவை நோக்கி நகரும். இதனால், கடலோர மாவட்டங்களில் மழை படிப்படியாக குறையும்.
 
மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூ, நீலகிரி, கரூர், கோவை, திருப்பூர், திருச்சி, நாமக்கல் ஆகிய உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
 
தற்போதைய நிலவரப்படி வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் வரும் நவம்பர் 18-ம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது இது 19, 20-ம் தேதிகளில் மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொள்ளும்.
 
மீனவர்கள் இன்று மாலை முதல் கடலுக்கு செல்லலாம். மீனவர்கள் நவம்பர் 18-ம் தேதி தெற்கு வங்ககடல் பகுதிக்கும் 19, 20 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்ககடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம்.
 
அக்டோபர் 1 , முதல் நவம்பர் 16 வரை இயல்பை விட 23% மழை குறைவாக பதிவாகியுள்ளது. நேற்று வரை 29 % குறைவாக இருந்த நிலையில் கஜா புயலால் 6% மழை கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...