???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்? 0 மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்! 0 நாடு முழுவதும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது; 60.21 சதவீத வாக்குகள் பதிவு! 0 பிரதமரின் கேதர்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்: திரிணாமூல் புகார் 0 வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க: ஸ்டாலின் 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலவசமாக எரிவாயு சிலிண்டர் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted : புதன்கிழமை,   ஜுன்   29 , 2016  07:09:46 IST

தமிழகத்தில் உள்ள ஏழைப் பெண்களுக்கும் இலவசமாக எரிவாயு சிலிண்டர் வழங்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும், இலவச சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தில் மானியத்தைக் குறைப்பதற்காக பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார்கள். அதன் அடிப்படையில் 3 கோடி போலி இணைப்புள்ள, 3 கோடி பயனாளிகளை நீக்கினார்கள்.

அதன்பின் சிலிண்டர் மானியச் சலுகைகளை பயன்படுத்தாமல் ஒரு கோடிப் பேர் தாங்களாகவே மானியத்தைத் துறப்பதற்காக வழி வகுத்தார்கள். அதற்கு பிறகு ஆண்டு வருமானம் ரூபாய் 10 இலட்சத்திற்கு மேல் பெறுவோருக்கு சிலிண்டர் மானியம் வழங்கப்படவில்லை. இவ்வாறு ஏற்கனவே அமலில் உள்ள சலுகைகளை ஒவ்வொன்றாக குறைப்பதற்கு உண்டான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

அதே சமயம் உத்தர பிரதேசத்தில் அங்குள்ள ஏழைப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் சிலிண்டர் இணைப்பு, 2 சிலிண்டர்கள், ஸ்டவ் மற்றும் ரெகுலேட்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. எனவே மத்திய அரசு- உத்தரப் பிரதேசத்தில் அடுத்து வர இருக்கின்ற சட்ட மன்றத் தேர்தலை கணக்கில் கொண்டு இச்சலுகைகளை அரசியல் கண்ணோட்டத்தோடு வழங்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இத்திட்டம் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், ஒடிசா, பீகார், கோவா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கும் நீட்டிக்கப்படும் என்ற செய்தியும் வெளிவந்திருக்கிறது.

அப்படியென்றால் தமிழ் நாட்டிலும் அத்திட்டம் நீட்டிக்கப்பட வேண்டுமல்லவா. அப்பொழுது தான் தமிழகத்தில் உள்ள ஏழைப் பெண்கள் இலவசமாக எரிவாயு சிலிண்டர் மற்றும் உபகரணங்களை பெற வழி வகுக்கும்.

எனவே மத்திய அரசு இத்திட்டத்தை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில ஏழை மக்களும் பயன் பெறும் வகையில் நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொது மக்கள் எரிவாயு சிலிண்டரை மானிய விலையில் பெற்று பயன்பெறும் திட்டத்தினை முடக்கும் செயல்களில் மத்திய அரசு ஒருபோதும் ஈடுபட கூடாது.

எனவே மத்திய பா.ஜ.க. அரசு எரிவாயு சிலிண்டர் மானியத்தையும், சிலிண்டர்களின் எண்ணிக்கையையும் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என த.மா.கா. சார்பில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...