???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கிடைத்தது 5.38% வாக்குதான்! டிடிவியின் எதிர்காலம் என்ன?

Posted : வெள்ளிக்கிழமை,   மே   24 , 2019  09:25:40 IST


Andhimazhai Image


 "பாத்துகிட்டே இருங்க. தமிழ்நாடு முழுக்கவே ஆர்.கே.நகர் ஆகப்போகுது...  அமமுக பெரிய வெற்றி பெறப்போவுது" என்று உறுதியுடன் விடாத நம்பிக்கையுடன் பல தினகரன் விசுவாசிகள் சொல்லிக்கொண்டிருந்தனர். குறைந்த பட்சம் இந்த தேர்தலில் நாங்கள் ஐம்பது லடசம் வாக்குகளாவது வாங்குவோம் என்பது அவர்கள் பலரின் கருத்தாக இருந்தது. அதற்கு ஏற்றதுபோல் பல இடங்களில் பிரம்மாண்டமான கூட்டம் தினகரனுக்குக் கூடியது. பெரும்பாலான கருத்துக்க் கணிப்பாளர்களும் அதிமுகவின் தோல்விக்கு தினகரன் பிரிக்கக்கூடிய வாக்குகள்தான் வழி வகுக்கும் என்று கருதினார்கள்.  ஆனால் இந்த தேர்தலில் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துவிட்டது அமமுக பற்றிய கணிப்புகள்.

 இக்கட்சிக்கு மொத்தம் 22,01564 வாக்குகள் மட்டுமே  கிடைத்துள்ளன. 5.38% வாக்குவங்கியை மட்டுமே பதிவு செய்திருக்கும் அமமுக பரவலாக மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் திமுககூட்டணி பெற்ற வெற்றி வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது தினகரன் பிரித்த வாக்குகள் மிகச் சொற்பமாகவே இருக்கின்றன.

அமமுக கட்சியில், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட தேர்போகி எ. பாண்டி, திருச்சி தொகுதியில் சாருபாலா ஆர். தொண்டைமான், விருதுநகரில் பரமசிவ அய்யப்பன், இராமநாதபுரத்தில் வ. து.ந. ஆனந்த், தஞ்சாவூரில் பொன். முருகேசன் ஆகியோர் மட்டுமே ஒரு லட்சம் வாக்குகளுக்குமேல் பெற்றிருக்கின்றனர்

 
மக்களவைத் தேர்தலில் அமமுக மூன்றாவது இடம் பிடித்த தொகுதிகள்:

 திருவண்ணாமலை – 38,639 வாக்குகள்

ஆரணி – 46,326 வாக்குகள்

சிவகங்கை – 1,17,560 வாக்குகள்

விழுப்புரம் – 58,019 வாக்குகள்

தேனி – 99,867 வாக்குகள்

கள்ளக்குறிச்சி – 50,179 வாக்குகள்

திருச்சி – 1,00,818 வாக்குகள்

விருதுநகர் – 1,07,033 வாக்குகள்

இராமநாதபுரம் – 1,20,785 வாக்குகள்

கடலூர் – 43,766 வாக்குகள்

தூத்துக்குடி – 76,886 வாக்குகள்

சிதம்பரம் – 61,193 வாக்குகள்

தென்காசி – 91,130 வாக்குகள்

அரக்கோணம் – 66,360 வாக்குகள்

மயிலாடுதுறை – 66,401 வாக்குகள்

திருநெல்வேலி – 62,209 வாக்குகள்

நாகப்பட்டினம் – 68,451 வாக்குகள்

தர்மபுரி – 50,380 வாக்குகள்

தஞ்சாவூர் – 1,00,568

 
இக்கட்சியிலும் யாருமே கட்டுத்தொகை பெறவில்லை. தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 6 சதவீத வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றால் மட்டுமே, அவருக்கு இத்தொகை திரும்ப வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் சில இடங்களைத் தவிர அமமுக பெரிதாக வேறெங்கும் பிரகாசிக்க முடியவில்லை.

 "ஜெயலலிதா கற்றுத்தந்த துணிவோடு, ஃபீனிக்ஸ் பறவையைப்போல மீண்டும் எழுந்து நிற்போம். தூய்மையான அன்போடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் உரிமைகளுக்காக அ.ம.மு.க-வின் குரல் எப்போதும் போல ஓங்கி ஒலித்திடும்." என்று தேர்தல் முடிவுகளைக் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் தினகரன்.

"எங்களுக்குக் கிடைத்த சின்னம் மிகத்தாமதமாக வழங்கப்பட்டது ஒரு முக்கியக் காரணம். இன்னொன்று அவர் கட்சியை இன்னும் பல மாதங்கள் முன்பே பதிவு செய்து அமைப்பு ரீதியாக இன்னும் பலமாக்கி இருந்திருக்கவேண்டும். இவை இரண்டும்தான் குறைபாடு. ஆனாலும் இந்த சறுக்கல்களைத் தாண்டி எழும் மன உறுதி அவருக்கு உள்ளது" என்கிறார் ஒரு அமமுக ஆதரவாளர்.

பார்க்கத்தானே போகிறோம்?


English Summary
Future of Ttv dinakaran

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...