Posted : வெள்ளிக்கிழமை, ஜனவரி 21 , 2022 15:40:13 IST
தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி-23) முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரொனா தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில், கடந்த இரண்டு ஞாயிற்று கிழமைகளும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி-23) அன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்களின் நலன் கருது இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.