அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அக்டோபர் 18-ந் தேதி முதல் 100% விமானங்கள் இயங்க அனுமதி!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   13 , 2021  08:34:06 IST

வரும் 18-ந் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை உச்ச வரம்பு இன்றி, முழு அளவில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு எதிராக நாடு போராடும் வேளையில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. பின்னர் கொரோனா தொற்று பரவல் குறையத்தொடங்கி படிப்படியாக விமானங்கள் இயக்கப்பட்டன. தற்போது விமானங்கள், கொரோனாவுக்கு முந்தைய சேவையில் 85% சேவை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், வரும் 18-ந் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை உச்ச வரம்பு இன்றி, முழுத்திறனுடன் இயங்குவதற்கு அனுமதிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
 
அதே நேரத்தில் விமானங்களை முழுமையாக இயக்குகிறபோது, கொரோனா கால கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யவும், பொருத்தமான விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்யவும் விமான நிறுவனங்களும், விமான நிலையங்களை இயக்குவோரும் உறுதி செய்யுமாறு கோரப்பட்டுள்ளனர். விமானங்கள் முழுத்திறனுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், பண்டிகைக்காலத்தில் கட்டணங்கள் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...