???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116! 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஒரு கவிஞனை தமிழ் சமூகம் அறிந்துகொள்ள அவன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டியிருக்கிறது!

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   01 , 2019  05:13:47 IST


Andhimazhai Image
கவிஞர் பிரான்சிஸ் கிருபாவின் ’சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்’ கவிதை தொகுப்பு நூல் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நூலை எழுத்தாளர் யூமா வாசுகி வெளியிட கவிஞர் கார்த்திக் நேத்தா பெற்றுக்கொண்டார்.
 
இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் சாம்ராஜ், கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன், எழுத்தாளர் ஸ்டாலின் சரவணன், கவிஞர் பால்முகில் ஆகியோரும் பங்கேற்றனர்.
 
நிகழ்ச்சியில் உரையாற்றிய அனைவரும் கவிஞர் பிரான்சிஸ் கிருபாவுடனான தமது உறவையும், அவரது கவிதைகளால் நெகிழ்ந்த தருணங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
 
கவிஞரும், மக்களவை உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன் உரையாற்றும்போது, ”பிரான்சிஸ் என்கிற மனிதர் வேறு, பிரான்சிஸ் என்கிற கவிஞர் வேறு அல்ல. நுட்பமும், குழந்தை மனமும் கொண்ட ஒரு பொக்கிஷம் பிரான்சிஸ் கிருபா. எங்காவது இருந்து தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வரும். அதற்கு நேரம் குறித்து எந்த புரிதலும் இருக்காது. ஏனெனில் நமக்கான நேரம் என்பது வேறு, பிரான்சிஸுக்கான நேரம் என்பது வேறு. அதுவொரு பித்து மனநிலையை போன்றதுதான். பிரான்சிஸுக்கு கோயம்பேட்டில் சமீபத்தில் நடந்ததும் அப்படியானது தான். அதனை ஒரு அபத்த நாடகமாகவே நான் பார்க்கிறேன். அந்நியன் நாவலில் வரும் மெர்ஸோ தான் எனக்கு நினைவுக்கு வந்தான். படைப்பாளிகளின் பித்து மனநிலையை தமிழ்ச் சமூகம் புரிந்துகொள்வது கடினம் என்பது தான் இங்கு படைப்பாளிகளுக்கு நிகழ்கின்ற துயரம்” என்று கூறினார்.
 
இதனைத் தொடர்ந்து பேசிய கவிஞர் மனுஷ்யபுத்திரன், “இங்கு பிரான்சிஸ் கிருபா பற்றி பேசுவதா அவரது கவிதைகள் பற்றி பேசுவதா என்ற தடுமாற்றம் ஏற்படுகிறது. எல்லா கவிஞர்களுக்கும் அவர்களது வாழ்கையில் ஒரு விபத்து நடக்கும். பிரான்சிஸ் கிருபாவுக்கு கோயம்பேட்டில் நடந்தது அப்படியான விபத்துதான். துரதிஷ்டமாக ஒரு கவிஞனை தமிழ் சமூகம் அறிந்துகொள்ள அவன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டியிருக்கிறது. ஒரு எழுத்தாளனை இந்த சமூகமோ கலாச்சார சூழலோ பாதி அழிக்கிறதென்றால், எழுத்தாளனோ கவிஞனோ மீதி தன்னைத்தானே விரும்பி அழித்துக்கொள்கிறான். நாம் எச்சரிக்கையாக் இருந்திருந்தால், சற்று முயற்சித்திருந்தால் வாழ்கையின் சில சிதைவுகளில் இருந்து விடுபட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. 
 
ஒரு எழுத்தாளனுடைய பித்துநிலையை பரவலாக கொண்டாடுகிறார்கள். எழுத்தாளனுடைய பித்துநிலையை நாம் புனிதப்படுத்துகிறோம். ஆனால், இதிலிருந்து விலகி இருக்கும் பொதுச்சமுகம் அதனை வேறொரு இடத்தில் இருந்து பார்க்கிறது. பல சமயங்களில் அந்த பித்துநிலையின்மீது நாம் உருவாக்குகிற கவர்ச்சி என்பது அந்த எழுத்தாளனை கொண்டாடுவதாக இருக்கிறதா? அல்லது காலப்போக்கில் அந்த எழுத்தாளனுடைய அன்றாட வாழ்க்கையை அழிக்கிறதா, ஒருகட்டத்தில் அவன் எழுத்தில் இருக்கிற உள்ளார்ந்த ஒழுங்கையுமே அழிக்க ஆரம்பிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் மிகப்பெரிய படைப்புத்திறனுடன், உக்கிரமாகவும் வந்த பல படைப்பாளிகளின்  வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட சிதைவுகளின் காரணமாக, அதற்கு அவர்கள் பொறுப்பில்லை என்றாலும் கூட, அவர்களது படைப்புகள் சென்று சேர்ந்திருக்க வேண்டிய இடத்தை அடையாமல் போய்விட்டதாக தோன்றுகிறது. ஒரு எழுத்தாளனை பாதுகாப்பது என்பது வெறுமனே அவனுக்கான உபகாரங்களை செய்வது மட்டுமல்ல, அவனை வலிமையான மனிதனாக மாற்றுவதென்பது, அவனது மொழியுனுடைய வலிமையை அவன் தக்கவைத்துக்கொள்வதற்கு உதவ வேண்டியதென்பதுதான் அதன் அர்த்தம். எனவே, படைப்பாளியின் மீது பச்சாதாபம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். அது அவனுக்கு செய்யப்படும் தீங்கு” என்றார். 
 
இறுதியாக உரையாற்றிய கவிஞர் பிரான்சிஸ் கிருபா, பேச வார்த்தைகளின்றி நெகிழ்ந்த நிலையில் நன்றி சொல்லி அமர்ந்தது அரங்கத்தில் கரவொலியை எழுப்பியது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...