???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நேர்காணல்: கமல் முதல் ரஜினி வரை - ஒளிப்பதிவாளர் திரு 0 பல்கலைக்கழக மானிய குழுவை கலைக்கக்கூடாது: மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் 0 பேரிடர் மீட்பு பயிற்சியில் மாணவி மரணம்: பயிற்சியாளருக்கு ஜூலை 27 வரை காவல் 0 நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாது: நியூட்ரினோ ஆய்வு மைய இயக்குநர் 0 ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் 0 மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு! 0 திருப்பதி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனத்திற்கு ஒன்பது நாட்கள் தடை 0 வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு! 0 மதம், பிரிவினை என மக்களை அச்சுறுத்துகிறது காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் விமர்சனம் 0 பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் கைது! 0 அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு! 0 எட்டு வழிச்சாலை கெட்ட வழிச்சாலையாக மாறிவிடக் கூடாது: கவிஞர் வைரமுத்து 0 ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய்: ரூ.32,000 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம்! 0 அரசு கட்டணத்தையே வசூலிக்க அண்ணாமலை பல்கலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! 0 மீன்களில் ரசாயன பூச்சு: அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தலைமை நீதிபதிக்கு எதிராக நான்கு நீதிபதிகள் கருத்து!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   12 , 2018  03:28:10 IST


Andhimazhai Image
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர் நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள். இது நீதித்துறையை குலுக்கி உள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் உள்ளிட்ட 4 நீதிபதிகள் இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். நாட்டின் நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீடியாக்களை சந்திப்பது இதுவே முதல்முறை.செல்லமேஸ்வர் கூறுகையில், கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் நடைபெறுவது எதுவும் சரியில்லை. இதுகுறித்து தலைமை நீதிபதி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சில விவகாரங்கள் தோல்வியில்தான் முடிந்தன.
 
சில மாதங்களுக்கு முன்பு முக்கிய விவகாரம் ஒன்றில் 4 நீதிபதிகள் கையெழுத்திட்டு கடிதம் அளித்தோம். அந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. நீதிபதிகளுக்கு வழக்கு ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் நிலவுகிறது. உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியாக இல்லை என்பதால், வேறு வழியில்லாமல், எங்கள் கவலைகளை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க விரும்பினோம். தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து எடுத்துக்கூறியபோதிலும் கூட பலன் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் மீடியாக்களை சந்தித்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செல்லமேஸ்வர் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அவருடன் நீதிபதி கோகோய், எம்பி லோகூர், குரியன் ஜோசப் ஆகியோரும் இருந்தனர். தலைமை நீதிபதியை நீக்கவேண்டுமா என்று கேட்டதற்கு என் வாயில் உங்கள் கருத்தைப் புகுத்தாதீர்கள் என்று மட்டும் நீதிபதி கூறினார்.
 
தலைமை நீதிபதிக்கு அவர்கள் அளித்தகடிதம் பின்வருமாறு:

English Summary
four sc judges against Sc Chief Justice

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...