செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
முன்னாள் எம்.பி மைத்ரேயன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்!
ஓபிஎஸ்-க்கு ஆதரவளித்து வந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
முன்னாள் எம்.பி மைத்ரேயன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்!
Posted : புதன்கிழமை, ஜுன் 22 , 2022 13:29:29 IST
ஓபிஎஸ்-க்கு ஆதரவளித்து வந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுவடைந்து நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவு அதிகரித்துள்ளது . இதனால் ஓபிஎஸ் விரைவில் ஓரங்கட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இதை ஒத்திவைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது . இந்த சூழலில் பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளனர். அத்துடன் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து வந்த முக்கிய நிர்வாகிகளும் தற்போது எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுள்ளனர்.
இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் மைத்ரேயன் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி சந்தித்து அவர் தனது ஆதரவை தெரிவித்துக் கொண்டார். இதுவரை மைத்ரேயன் ஓபிஎஸ் ஆதரவாளராக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளதால் அவர் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்து உள்ளார்.
|