???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நேர்காணல்: கமல் முதல் ரஜினி வரை - ஒளிப்பதிவாளர் திரு 0 பல்கலைக்கழக மானிய குழுவை கலைக்கக்கூடாது: மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் 0 பேரிடர் மீட்பு பயிற்சியில் மாணவி மரணம்: பயிற்சியாளருக்கு ஜூலை 27 வரை காவல் 0 நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாது: நியூட்ரினோ ஆய்வு மைய இயக்குநர் 0 ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் 0 மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு! 0 திருப்பதி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனத்திற்கு ஒன்பது நாட்கள் தடை 0 வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு! 0 மதம், பிரிவினை என மக்களை அச்சுறுத்துகிறது காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் விமர்சனம் 0 பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் கைது! 0 அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு! 0 எட்டு வழிச்சாலை கெட்ட வழிச்சாலையாக மாறிவிடக் கூடாது: கவிஞர் வைரமுத்து 0 ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய்: ரூ.32,000 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம்! 0 அரசு கட்டணத்தையே வசூலிக்க அண்ணாமலை பல்கலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! 0 மீன்களில் ரசாயன பூச்சு: அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் கணேசன் காலமானார்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஏப்ரல்   15 , 2018  09:11:40 IST

தி.மு.க.வில் தொடக்க காலம் முதல் இருந்து வந்த சா.கணேசன், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். தி.மு.க. தலைமை அலுவலகச் செயலராக இருந்த அவர் 1959, 1964, 1968-ஆம் ஆண்டுகளில் நடந்த மாநகராட்சி உறுப்பினர் தேர்தல்களில் தொடர்ந்து 3 முறை தேர்வு செய்யப்பட்டார். 
 
அதைத் தொடர்ந்து 1970 நவம்பர் முதல், 1971 நவம்பர் வரையிலான ஓராண்டு காலத்துக்கு சென்னை மேயராக இருந்துள்ளார். மேயராக இருந்தபோது மும்பையில் நடைபெற்ற இந்திய மேயர்கள் மாநாட்டுக்குத் தலைமை வகித்து, நாட்டில் உள்ள மாநகராட்சிகளில், ஒரே மாதிரியான வரி விதிக்க அனுமதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் அளித்தார். 
 
வயது முதிர்வால் கடந்த சில நாள்களாக உடல் நலம் குன்றியிருந்த சா. கணேசன், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இளைய மகன் வீட்டில் நேற்றிரவு காலமானார். அவரது உடலுக்கு, ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, முத்தரசன், ம.தி.மு.க. துணை பொதுசெயலாளர் மல்லை சத்யா, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...