???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்திய அமைதிப் படை ஈழப் பெண்களை பலாத்காரம் செய்தது: முன்னாள் விடுதலைப் புலி குற்றச்சாட்டு

Posted : புதன்கிழமை,   நவம்பர்   05 , 2014  01:24:06 IST

இந்திய அமைதிப் படையினர் ஈழ தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக இலங்கை அமைச்சர் கருணா குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கடந்த 1987-ம் ஆண்டு முதல் 1990-ம்ஆண்டு வரை இந்திய அமைதிப் படையினர் இலங்கை ராணுவத்திற்கு உதவியாக பாதுகாப்பு பணியில் இருந்ததாக தெரிவித்தார். அப்போது இந்திய ராணுவத்தினர் ஏராளமான தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாகவும் அவர் கூறினார். மேலும் இந்திய ராணுவ வீரர்களால் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளார். இதற்கு தம்மிடம் தகுந்த ஆதாரங்கள் உள்ளதாகவும் அமைச்சர் கருணா குறிப்பிட்டார். இலங்கை அதிபராக பதவி வகித்த பிரேமதாஸா, விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஏராளமான ஆயுதங்கள் வழங்கியதாகவும் கருணா கூறியுள்ளார். இதன் பின்னரே விடுதலைப் புலிகள் இயக்கம் பெரும் வளர்ச்சி அடைந்ததாகவும் கருணா குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுத்து வட இலங்கை மீனவர்களுக்கு கடற்படையினர் உதவி வருவதாகவும் கூறினார். விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியப் பொறுப்புகள் வகித்த கருணா கடந்த 2004-ம் ஆண்டு அந்த அமைப்பிலிருந்து வெளியேறி தனி இயக்கத்தை தொடங்கினார். பின்னர் அதை அரசியல் கட்சியாக மாற்றிய கருணா, ராஜபக்சேவுடன் கூட்டணி அமைத்து தற்போது துணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...