???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 `கஜா' புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் 0 இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! 0 இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் 0 ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி! 0 கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது! 0 கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை! 0 குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் 0 கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது! 0 மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் 0 கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காட்டுத் தீ விபத்து: 8 பேரின் உயிர்களை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   13 , 2018  09:19:11 IST

குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத் தீ விபத்துக் குறித்து வாட்ஸ் அப் மூலம் தகவல் 
அனுப்பி தேனி மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட உதவியதோடு மட்டுமல்லாமல், 
தமிழக அரசையும் உஷார் படுத்தி, மத்திய அரசிடம் ஹெலிகாப்டர் உதவிகளைப் பெற்று 
மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த உதவிய 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஜெகதீசன், செல்வம் ஆகிய இருவரையும் மதுரை அரசு மருத்துவமனையில் வைத்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பாராட்டினார். 
 
பின்னர் அவர்களை உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோருக்கும் அறிமுகம் 
செய்தார். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் ஜெகதீசன், “எங்களைத் தொடர்பு கொண்ட நிவேதாவின் இருப்பிடம் தேடிச் செல்லும் போதே காட்டுத் தீ பரவிய பகுதிக்கு இரண்டு வழிகள் இருந்த பாதையில் எதில் செல்வது எனத் திகைத்த நின்றதாகக் கூறினார். அதனால் நாங்கள்  இரு குழுக்களாக இரு பாதைகளிலும் சென்றதோடு, ஒரு குழுவை குரங்கணியில் நிறுத்தினோம்” என்று கூறினார்.
 
பின்னர் அங்கு இருந்த வழியில் இருந்த மலைக் கிராமத்து இளைஞர்களின் பேருதவியோடு, 9 கி.மீ. தொலைவில் பதுங்கியிருந்த 8 பேரை உயிரோடு மீட்டு கீழே அனுப்பியதாக நெகிழ்ச்சியோடு கூறினார். மேலும் மாலை 5 மணிக்கு தொடங்கிய மீட்பு பணி  மறுநாள் அதிகாலை வரை நீடித்ததாகக் கூறிய ஓட்டுநர் கும்மிருட்டுத் தொடங்கிய பிறகு வந்த முதல் ஹெலிகாப்டரால் கூட எது மேடு எது பள்ளம் என நிர்மாணிக்க முடியாமல் திரும்பச் சென்றதாகக் கூறினார். மேலும் எங்கள் பணிக் காலத்தில், இது போன்றதொரு மீட்புப் பணியில் இத்தனை உயிர்களை இழந்த நிலையில் சந்தித்தது மனதைக் கனக்கச் செய்தது என வேதனையுடன் தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...