???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு 0 கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது 0 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி 0 மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு 0 விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி 0 வீடுதேடி வரும் ரேஷன் கடையில் ₹ 1000 உதவித்தொகை டோக்கன் 0 மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல: ஏ.ஆர்.ரஹ்மான் 0 இந்தியா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,637ஐ தாண்டியது! 0 சென்னை பீனிக்ஸ் மால் சென்றவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல் 0 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் 0 மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் 0 கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் 0 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு 0 கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி: நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   26 , 2020  04:09:48 IST

நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது “கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு ரூ 50 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். 80 கோடி ஏழைமக்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு கூதலாக  5 கிலோ அரசியும் ( அல்லது கோதுமை) ஒரு கிலோ பருப்பும்  இலவசமாக வழங்கப்படும்.

 

 இவை  மூன்று தவணைகளில்  வழங்கப்படும். ஜனதன் வங்கி கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு தலா ரூ. 500 வழங்கப்படும் . உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கு  சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள பெண்களுக்கான கடன் வழங்கும் வரம்பு ரூ 10 லட்சத்திலிருந்து  ரூ 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மக்களின் ஊதியம் ரூ 182ல் இருந்து  ரூ. 202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர். 1.7 லட்சம்கோடி ரூபாய் கொரோனா சிறப்பு ஒதுக்கீட்டின் படி இவை மேற்கொள்ளப்படுகின்றன.

 

 விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கப்படும்  ரூ 6000 ரூபாயில் ரூ 2000  முன்கூட்டியே வழங்கப்படும். 100 பணியாளர்களுக்கும் குறைவான ஊழியர்களை கொண்ட நிறுவனங்கள் இபிஎப் தொகையை மூன்று மாதங்களுக்கு செலுத்த வேண்டியதில்லை. இந்த இபிஎப் தொகையை அரசே செலுத்தும்.  பிஎப் தொகையின் 75 சதவிகிதத்தை அல்லது மூன்று மாத சம்பளத்தை முன்பணமாக பெற்றுக்கொள்ளலாம். கட்டடத்தொழிலாளர்களின் நலனுக்காக  மாநில அரசுகள் ரூ 31,000 கோடி நிதியை பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. ”

 

இவ்வாறு அவர் கூறினார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...