???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை 0 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று 0 சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம் 0 சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம் 0 சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விமான போக்குவரத்து தொடங்கியது: முதல் நாளில் 630 விமானங்கள் ரத்து

Posted : திங்கட்கிழமை,   மே   25 , 2020  22:01:07 IST

அறிவிக்கப்பட்டபடி 2 மாதங்களுக்கு பிறகு நேற்று இந்தியாவில் விமான போக்குவரத்து தொடங்கியது. மேற்கு வங்காளம், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் விமானங்கள் இயக்கப்பட்டன.

முதல் விமானம் டெல்லியில் இருந்து நேற்று அதிகாலை 4.45 மணிக்கு மராட்டிய மாநிலம் புனே புறப்பட்டு சென்றது. இதேபோல் மும்பையில் இருந்து முதல் விமானம் காலை 6.45 மணிக்கு பீகார் தலைநகர் பாட்னா கிளம்பிச் சென்றது.

டெல்லியில் இருந்து 2 குழந்தைகள் உள்பட 29 பயணிகளுடன் முதல் விமானம் நேற்று காலை 8.40 மணிக்கு சென்னை வந்தது. மற்றொரு விமானம் 5 குழந்தைகள் உள்பட 109 பயணிகளுடன் காலை 9.15 மணிக்கு சென்னையில் தரை இறங்கியது. 3-வது விமானம் 36 பயணிகளுடன் காலை 10.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து சென்னை வந்தது.

சென்னை விமானநிலையத்தில் இருந்து முதன் முதலாக நேற்று காலை 6.35 மணிக்கு இண்டிகோ விமானம் ஒன்று 116 பயணிகளுடன் டெல்லி புறப்பட்டு சென்றது. அதன்பிறகு பெங்களூரு, கொச்சி, கோவை, வாரணாசி, திருவனந்தபுரம் நகரங்களுக்கும் விமானங்கள் சென்றன.

மும்பை, ஐதராபாத்தில் இருந்து கோவைக்கு நேற்று வர வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

பிற நகரங்களில் இருந்து சென்னைக்கு 25 விமானசேவைகளுக்கு மேல் இயக்க வேண்டாம் என்று மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொண்டது

இதனால் டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு நேற்று 16 விமானங்களும், இதேபோல் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கோவை, மதுரை, போர்ட்பிளேர் உள்ளிட்ட நகரங்களுக்கு 19 விமானங்களும் இயக்கப்பட்டதாக விமான போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன.

குறைவான பயணிகள் உள்ளிட்ட காரணங்களால் முதல் நாளான நேற்று நாடு முழுவதும் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...