???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   14 , 2019  23:29:40 IST

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, ஆண்டுதோறும் மத்திய- மாநில அரசுகள் மீன்பிடி தடைக்காலத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன. வங்கக்கடலை ஒட்டியுள்ள தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரா மற்றும் அரபிக்கடல் பகுதிகளான கேரளா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில், 60 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 15-ம் தேதி நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இரண்டு மாதங்களாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. இந்தநிலையில், 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நள்ளிரவு முதலே மீனவர்கள் கடலுக்கு செல்லத் தொடங்கினர்.

சென்னை காசிமேட்டில் இருந்து 500-க்கும் அதிகமான விசைப்படகுகளில், மீனவர்கள் கடலுக்கு சென்றனர். 15 நாட்கள் கடலில் தங்கி மீன்பிடிக்கும் வகையில், தேவையான மீன்பிடி வலைகள், ஐஸ் கட்டிகள், குடிதண்ணீர் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை அவர்கள் படகில் ஏற்றிச் சென்றனர்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...