???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை 0 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று 0 சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம் 0 சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம் 0 சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பொன்மகள் வந்தாள்- விமர்சனம்

Posted : வெள்ளிக்கிழமை,   மே   29 , 2020  02:04:03 IST


Andhimazhai Image
 திரையரங்குகளில் வெளியாகாமல்  நேரடியாக ஓடிடி  ப்ளாட்பார்மில் வெளியாகி இருக்கிறது  பொன்மகள் வந்தாள். அறிமுக இயக்குநர் ஜே.ஜே. ஃப்ரெட்ரிக் படத்தை இயக்கி இருக்கிறார்.
 
குழந்தைகளை கடத்தி கொலை செய்த வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்ட ஜோதி என்ற பெண்மணியை நிரபராதி என்று நிரூபிக்க நடக்கும் சட்டப்போராட்டம்தான்  கதைச் சுருக்கம். குற்றமே செய்யாத அப்பாவிகள் மீது பொய் வழக்கு ஜோடித்து, அதிகார பலம் கொண்ட குற்றவாளிகள் எப்படி தப்பித்துக்கொள்கிறார்கள் என்பதையும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளையும் அடிப்படையாக வைத்து திரைக்கதையை இயக்குநர் நகர்த்துகிறார்.
 
பொய் குற்றம் சாட்டப்பட்ட ஜோதிக்கு சார்பாக வாதாடும் வழக்கறிஞர் வெண்பா கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ளார். ஒரு வழக்கறிஞருக்கான உடல் மொழியை வெளிப்படுத்துவதிலும் வசனங்களை சரியான ரசத்துடன் வெளிப்படுத்துவதிலும் ஜோதிகா அசத்தி இருக்கிறார். பாலியல்வன்கொடுமைகளை சந்திக்கும் பாதிக்கப்பட்ட குழந்தையின் மனப்போராட்டத்தை அவர் பேசும் வசனங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு கடத்த முயற்சித்திருக்கிறார்.
 
எதிர்தரப்பு வழக்கறிஞராக வரும் பார்த்திபன் தனது வழக்கமான நடிப்பில் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறார். ஜோதிகாவிற்கு  சரி நிகரான கதாபாத்திரம் பார்த்திபனுக்கு வழங்கப்படிருக்கிறது. மேலும் வெண்பாவின்  ( ஜோதிகா) வளர்ப்பு தந்தையாக வரும் பாக்கியராஜ், நீதிபதியாக வரும் பிரதாப் போத்தன்,  பாண்டியராஜ், சுப்பு பஞ்சு,  விநோதினி போன்றவர்களும் தங்கள் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளனர்.
 
படத்தின் கதையை இரு வழக்கறிஞர்கள் நகர்த்தி செல்கிறார்கள் என்றால் வசனங்களின் பங்கும் பிரதானமாகும்.  லட்சுமி சரவணகுமார்,  இயக்குநர் ஜே.ஜே. ஃப்ரெட்ரிக், முருகேஷ் பொன்பார்த்திபன் ஆகியோரின் வசனங்களின் ஆழமும், சினிமாத்தனங்கள் இல்லாத எளிமையும் பார்வையாளர்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
 
இத்திரைப்படம் பார்வையாளர்களுக்கு பல வழக்குகளை நினைவுப்படுத்துகிறது. இன்னும் விசாரணையில் இருக்கும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, ராம்குமார் மரணம் தொடர்பான மர்மம் இப்படி பல எதார்த்த நிகழ்வுகளின் ஒவ்வொரு அம்சத்தை எடுத்துக்கொண்டு கதையாக மாற்றியிருக்கிறார் இயக்குநர்.
 
படத்தின் எதிர்பாராத பல திருப்பங்கள் இருக்கின்றன. 15 ஆண்டுகள் கழித்து ஏன் வெண்பா என்ற வழக்கறிஞர் ஜோதி வழக்கை மீண்டும் தோண்டி எடுத்து வாதாடுகிறார்? என்பதுபோன்ற திருப்பங்கள்.
 
எளியவர்களுக்கும் எட்டும் கனியாக நீதி இருக்க வேண்டும் என்பதை  பொன் மகளை வந்தாள் உரக்க சொல்லி இருக்கிறது.  
 
-வாசுகி


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...