???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 `கஜா' புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் 0 இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! 0 இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் 0 ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி! 0 கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது! 0 கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை! 0 குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் 0 கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது! 0 மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் 0 கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரொனால்டோ, மெஸ்ஸி இன்னும் யார்?

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   02 , 2018  07:34:08 IST


Andhimazhai Image

கால்பந்து விளையாட்டில் மிகவும் புகழ்பெற்றிருக்கும் சமகால வீரர்களான மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும்  வெளியேறிவிட கால்பந்து ரசிகர்களிடம் மெல்லிய சோகம் விரவிக்கிடப்பதை உணரமுடிகிறது. அர்ஜெண்டினா குரோஷியாவிடம் தோற்றபோது கேரள ரசிகர் ஒருவரும், உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய போது மேற்குவங்கத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது செய்தி.

 

ரொனால்டோ  ரஷ்யாவில் நடந்து கொண்டிருக்கும் இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போர்ச்சுகல் அணியின் கேப்டனாக மிகுந்த நம்பிக்கையை அளித்தார். முதல் சுற்று லீக் ஆட்டங்களில் அவர் முதல் ஆட்டத்திலேயே ஸ்பெயினுக்கு எதிராக ஹாட்ரிக் அடித்தார்.  மொராக்கோவுக்கு எதிராக ஒரு கோல் போட்டார். ஆனால் ஈரானுக்கு எதிராக ஒருபெனால்டியை அடிக்க தவற விட்டதில் இருந்து அவருக்கு இறங்குமுகமே. இரண்டாவது சுற்றில் உருகுவேயிடம் தோற்றதோடு ரொனால்டோவின் அணி வெளியேற வேண்டியதாயிற்று.  இப்போது அவருக்கு 33 வயது. அடுத்த உலகக்கோப்பை கத்தாரில் நடக்க உள்ளது. அதில் 37 வயதில் அவர் ஆடுவாரா என்ற கேள்வியை ரசிகர்கள் இப்போதே கேட்க ஆரம்பித்துவிட்டனர். போர்ச்சுகல் அணிக்கு உலகக்கோப்பைக்கு அருகில் செல்லும் வாய்ப்பைத் தரக்கூடியவராக இருந்த ரொனால்டோ இந்த வெளியேற்றத்துக்குப் பின்னால், “ எல்லோரும் நன்றாகவே ஆடினோம். உருகுவேயை விட நன்றாக ஆடினாலும் தோற்றுவிட்டோம், ஆனால் இந்த நல்ல போட்டியாகவே அமைந்திருந்தது,” என்று சொல்கிறார்.

அர்ஜெண்டினாவிலிருந்து தன் 13 வயதில் பார்சிலோனா கிளப் அணிக்கு தன் மருத்துவச் செலவை பார்த்துக்கொள்வார்கள் என்ற ஒப்பந்தத்துடன் ஆடுவதற்காகக் கிளம்பி வந்த மிகச்சிறந்த திறமைசாலி மெஸ்ஸி. கிளப் ஆட்டங்களில் மிகவும் ஜொலிக்கும் அவர் அர்ஜெண்டினாவுக்கு உலகக்கோப்பையை வெற்றி பெற்றுத்தந்து மரடோனா போல புகழ்பெறுவாரா என்று எதிர்பார்த்தனர். ஆனால் அர்ஜெண்டினா மீண்டும் ஏமாற்றத்தைத் தழுவ வேண்டியதாயிற்று. உண்மையில் ரஷ்யா உலகக்கோப்பைக்குத் தகுதி பெறவே

 

 

அர்ஜெண்டினா தடுமாறிய அணி. கடைசியாக ஈக்வெடார் அணிக்கு எதிராக மெஸ்ஸீ அடித்த ஹாட்ரிக் மட்டும் இல்லையென்றால் உலககோப்பைக்கே நுழைந்திருக்க முடியாது. இங்கும் முதல் சுற்றில் அர்ஜெண்டினா சொல்லிக்கொள்ளும் படி ஆடவில்லை. ஐஸ்லாந்துடன் ட்ரா, குரோஷியாவுடன் தோல்வி, நைஜீரியாவுடன் சுமாரான வெற்றி என்றுதான் இரண்டாம் சுற்றில் நுழைந்தது. பிரான்ஸுடனான ஆட்டத்தில் முதலில் அர்ஜெண்டினா கை ஓங்கி இருந்தது. ஆனால் பிரான்ஸு வீரர்கள் உஷாராக ஆடி வெற்றியைப் பறித்துவிட்டனர். மெஸ்ஸியின் அணி உலகக்கோப்பையில் இருந்து விலகுவதைப் பார்த்ததில் பலருக்கு இதயமே நொறுங்கிவிட்டது.  2016 கொபா ஐரோப்பா இறுதிப்போட்டியில் ஸ்பாட் கிக்கை தவற விட்டு அர்ஜெண்டினா தோற்க காரணமான மெஸ்ஸீ உடனே சர்வதேச கால்பந்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனாலும் மீண்டும் முடிவை மாற்றிகொண்டார். இம்முறை அப்படி எதுவும் செய்யவில்லை. ஆனால் அடுத்த உலகக்கோப்பையில் தன் 34வது வயதில் மெஸ்ஸி இதே தகுதியுடன் களமிறங்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

கால்பந்து மட்டுமல்ல. எந்த விளையாட்டாக இருந்தாலும் மிகப்பெரிய திறமைசாலிகள் அனைவரும் ஒரு நாள் ஓய்வு பெற வேண்டியவர்களே. மெஸ்ஸியும் ரொனால்டோவும் இதற்கு விதிவிலக்கல்ல. கால்பந்து ரசிகர்கள் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நாயகனைக் கொண்டாடியவர்கள். வெற்றியுடன் தங்கள் நாயகர்கள் விலக நேர்ந்தால் நிம்மதியாக இருந்திருக்கும்.  தோல்வி கசப்பானது. ஆனால் இந்த கசப்பும் சேர்ந்திருப்பதானால் தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கிறது?

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...