![]() |
டிராக்டர் பேரணிக்கு தயாராகும் விவசாயிகள்Posted : சனிக்கிழமை, ஜனவரி 23 , 2021 11:33:12 IST
டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் மத்திய அரசுடன் மேற்கொண்ட 11 வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி குடியரசு நாளின்போது டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் இதுவரை 140க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 10 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில், நேற்று நடந்த 11-வது சுற்றுபேச்சுவார்த்தையிலும் மத்திய அரசு முன்வைத்த18 மாதங்கள் வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்கிறோம் என்ற முடிவை விவசாயிகள் புறக்கணித்தனர். வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகள்தான் இனிமேல்முடி வெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திட்டமிட்டபடி குடியரசு நாளின் போது மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த விவசாயிகள் தயாராகிவருகின்றனர்.
|
|