![]() |
விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தைPosted : வெள்ளிக்கிழமை, ஜனவரி 15 , 2021 09:51:34 IST
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றன.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மதியம் 12 மணியளவில் 9-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளன. அதைப்போல தங்கள் அவல நிலைக்கு விடிவு ஏற்பட வேண்டும் என விவசாயிகளும் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தை குறித்து வேளான் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் , ‘‘திறந்த மனநிலையுடன் விவசாயிகளின் தலைவர்களுடன் பேசுவதற்கு அரசு தயாராக இருக்கிறது. மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்கள் பிரதிநிதிகளுக்கும் நடைபெறும் பேச்சுவார்த்தையில் சாதகமான விவாதங்கள் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என கூறினார்.
|
|