அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பேமிலிமேன் -2: உணர்வுகளைக் கிளறுகிறார்கள்!

Posted : சனிக்கிழமை,   ஜுன்   05 , 2021  13:17:11 IST


Andhimazhai Image

வெப்சீரிஸாக தனித்துப் பார்க்கும்போது பேமிலிமேன் -2 என்பது மிகவும் பரபரப்பானதாகவும் கவனத்தை ஈர்ப்பதாகவும் எழுதப்பட்டு பிரமாதமாகப் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.

 

கதையின் நாயகன் ஸ்ரீகாந்த் திவாரி என்ற என்.ஐ.ஏவில் பணிபுரியும் அதிகாரியாக நடித்துள்ள மனோஜ் பாஜ்பாய். கேட்கவே வேண்டாம் இவர் எப்படி நடிப்பார் என்று எல்லோருக்கும் தெரியும். இவருக்கு சமமாக சமந்தா. ராஜேஸ்வரி சேகரன் என்ற பெயரில் ஈழப்போராளி. சகலவிதமான போர்த்திறனும் மிக்க முதல்களப் போராளி. சமந்தாவும் பிரமாதப் படுத்தி இருக்கிறார். சந்தேகமே இல்லை.

 

கதை என்னவோ கற்பனைக் கதைதான்: ஈழத்தில் போர் கொடூரமாக முடிவுக்கு வந்த நிலையில் அதன் தலைவர் பாஸ்கரன்(மைம் கோபி) தப்பிப்போய் லண்டனில் நாடுகடந்த அரசு நடத்துகிறார். அவரது தம்பி சென்னைக்கு வர, அவரை பிடித்துத்தருமாறு இலங்கை அரசு இந்திய அரசைக் கேட்க, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நேர் நிற்க வைக்கையில் ஐஎஸ்ஐ உளவாளி ஒருவன் ( சீசன் ஒன்றிலிருந்து துரத்தும் நிழல்) வெடிகுண்டு வெடிக்கச் செய்து கொன்றுவிடுகிறான். பழி இந்திய அரசு மீது விழ, பாஸ்கரன் பழிவாங்கத் துடிக்கையில் அவருக்கு ஐஎஸ்ஐ மேஜர் ஒருவன் கை கொடுக்கிறான்.

 

சென்னையில் அகதியாக வாழும் சமந்தா உள்ளிட்ட சிலரை மீண்டும் பாஸ்கரன் உயிர்ப்பித்து, சென்னைக்கு இலங்கை அதிபருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த வரும் இந்திய பிரதமருக்குக் குறிவைக்கிறார்.

 

இதை ஸ்ரீகாந்த் திவாரி முறியடிப்பதுதான் கதை. இதற்கிடையில் அவரது மனைவி பிரியாமணி, குழந்தைகள் ஆகியோருடன் நடக்கும் உணர்வுபூர்வமான சிக்கல்களும் கலந்து செல்லும் திரைக்கதை.

 

கதை பெரும்பாலும் சென்னையில் நடக்கிறது. தமிழே பேசத்தெரியாத மத்திய அரசு அதிகாரிகளை தமிழ் அதிகாரிகள் கலாய்ப்பது, உண்மையில் நன்றாகவே இருக்கிறது. காவல் அதிகாரி உமையாளாக தேவதர்ஷினி, முத்துப்பாண்டியனாக ரவீந்திர விஜய் நல்ல பங்களிப்பு. சின்ன சின்ன விஷயங்களையும் கவனித்து செய்திருக்கிறார்கள்.

 

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் விமானம் கொழும்பு நோக்கிப் பறந்ததை எடுத்துக்கொண்டு, இதிலும் செய்து பார்த்திருக்கிறார்கள். திக் திக் என்று பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்டிருக்கிறார்கள்.

 

இந்த தொடரின் இயக்குநர்கள் இருவர். ராஜ், டிகே. ஒருவர் சித்தூரில் பிறந்தவர், இன்னொருவர் திருப்பதிக்காரர். தமிழக எல்லையில் பிறந்த இருவரிடமும் ஈழப்போராட்டம் பற்றிய எந்த இரக்க உணர்வும் இல்லை. இந்திய பெரும்பான்மை  பார்வையான தீவிரவாத இயக்கம் என்ற பார்வையிலேயே இவர்களும் அணுகி இருக்கிறார்கள் என்பது வருத்தமாக இருக்கிறது.

 

பாஸ்கரனை முன்பு ஒருகாலத்தில் ஹேண்டில் செய்தவராக வரும் செல்லம் என்ற பழைய ரா அதிகாரி, சொன்னால் தம்பியை சரண்டர் செய்ய வைக்கிறார் லண்டனில்  இருக்கும் பாஸ்கரன். அதே சமயம், ஐஎஸ்ஐ தான் தம்பியைக் குறிவைத்தது என்ற உண்மையை பாஸ்கரனுக்கு செல்லம் மூலம் சொல்ல வைத்திருக்கலாமே என்ற கேள்வி உறுத்துகிறது.

 

தம்பிக்காக இயக்கத்தின் எதிர்காலத்தை அழிக்க முற்படும் பாஸ்கரன், தன் இயக்கத்தவரை மது அருந்தக்கூடாது எனச் சொல்லிவிட்டு, தான் மது அருந்துவதாகக் காட்டுவதெல்லாம் தேவையில்லாத வேலைதான்.

 

வீராரண்யத்தில் (வேதாரண்யம்?) காவல்நிலையத்தில் போராளிகள் தாக்குதல் நடத்துவதாகக் காட்டுவதெல்லாம் உச்சகட்ட நகைச்சுவை. மசாலா வேண்டும் என்பதற்காக, மிளகாய்ப் பொடியைக் கொட்டி இருக்கிறார்கள்.

 

ஈழப்போராட்டம் தொடர்பான உண்மைச் சம்பவங்களை கையாண்டு இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மைகளை யார் கையாளுகிறார்கள் என்பதைப் பொறுத்தே விளைவுகள் இருக்கும். ஈழ ஆதரவு தமிழ் பார்வையாளர்களைப் பொறுத்தவரையில் சில இடங்களில் கசப்பாகவே உணரவேண்டி இருக்கும்.

 

மற்ற மொழிப் பார்வையாளர்களுக்கு எல்லாம் ஒன்றுதான். விறுவிறுப்பான மசாலா. நாம் காஷ்மீர், வடகிழக்குப் பிரச்னைகளின் அடிப்படையிலான படங்களைப் பார்ப்பதுபோல.

 

-எம்.எம்.

 

 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...