???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்! 0 விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு 0 தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு 0 சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் 0 தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்! 0 காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு! 0 சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி 0 ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை! 0 அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி! 0 கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை!

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   15 , 2018  22:59:25 IST

அசாம் மாநிலத்தில் நடத்தப்பட்ட போலி என்கவுண்டர் விவகாரத்தில் ராணுவ மேஜர் ஜெனரல் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
அசாம் மாநிலம் தாங்காரி என்ற இடத்தில் கடந்த 1994-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி முதல் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்து வந்த 5 இளைஞர்கள் திடீரென மாயமாகினர். அதன்பின்னர் இவர்களை ராணுவத்தினர் சிலர், பிடித்துச் சென்று சுட்டுக் கொன்று விட்டதாக தகவல்கள் வெளியாகின. தேயிலை தோட்டத்தின் நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில்  அசாமின் முன்னாள் அமைச்சரும், பாஜகவின் தலைவருமான ஜகதீஷ் பூயன் அளித்த புகாரின் பேரில்தான் அவர்களை ராணுவத்தினர் கைது செய்ததாக கூறப்பட்டது.
 
ஆனால் ராணுவத்தினர் அந்த இளைஞர்களை உல்பா தீவிரவாதிகள் என்று  நினைத்து பிடித்துச் சென்றதாக ராணுவ அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்நிலையில் ராணுவ அதிகாரிகள் தங்களின் பதவி உயர்வுக்காகவே இந்த போலி என்கவுண்டரை நடத்தியதாக அசாம் கனபரிஷத் கட்சி வழக்கு தொடர்ந்து போராடி வந்தது. இந்த என்கவுன்டர் தொடர்பான வழக்கு ராணுவ நீதிமன்றத்தில் நேற்று விசாரணக்கு வந்தது.
 
இந்த வழக்கில் மேஜர் ஜெனரல் ஏ.கே. லால், கர்னல்கள் தாமஸ் மேத்யூ, ஆர் எஸ் சிபிரன், கேப்டன் பொறுப்பில் இருந்த திலீப் சிங் மற்றும் ஜெகதியோ சிங் மற்றும் நாயக் பொறுப்பில் இருந்த அல்பிந்தர் சிங் மற்றும் ஷிவேந்தர் சிங் ஆகியோர் குற்றவாளிகள் என ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதனைத் தொடர்ந்து இவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...