![]() |
பட்னாவிஸ் துணைமுதல்வர் - பா.ஜ.க.வின் அடுத்த அதிரடிPosted : வியாழக்கிழமை, ஜுன் 30 , 2022 19:21:37 IST
மகாராஷ்டிர மாநில ஆட்சிக் குழப்படி விவகாரத்தில் திருப்பத்துக்கு மேல் திருப்பமாக காட்சிகள் அரங்கேறிவருகின்றன. இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் அமைச்சராகப் போவதில்லை எனக் கூறிய முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சராகப் பதவியேற்பார் என்று அவரின் பா.ஜ.க. தலைமை அறிவித்துள்ளது.
பா.ஜ.க.வின் தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை இத்தகவலைத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மாலையில் ஆளுநரைச் சந்தித்தபின்னர், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசாங்கத்தில் தான் எந்தப் பொறுப்பையும் வகிக்கப்போவதில்லை என்றும் அரசாங்கம் எந்தச் சிக்கலும் இல்லாமல் செயல்பட ஒத்துழைக்கப் போவதாகவும் பட்னவிஸ் கூறியிருந்தார்.
அதையடுத்து, பாஜக தலைவர் நட்டா ஊடகங்களுக்குப் பேசுகையில், கட்சியின் மத்தியத் தலைமையானது பட்னவிஸ் துணைமுதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் எனத் தீர்மானித்திருக்கிறது; துணைமுதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி அவரிடம் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் பதவியேற்பு விழா, ஆளுநர் மாளிகையில் 7.30 மணியளவில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. English Summary
Fadnawis to be Dputy CM - JP Nadda
|
|