???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பேஸ்புக் தகவல் திருட்டு: விஷயம் இதோடு முடிந்துபோய் விடவில்லை!

Posted : வெள்ளிக்கிழமை,   மார்ச்   23 , 2018  09:31:30 IST


Andhimazhai Image
டந்த வார இறுதியில் உலக அளவில் விவாதிக்கப்பட்ட பெயர்கள் மூன்று. கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா, மார்க் ஸுக்கர்பெர்க், அலெக்ஸாண்டர் கோகன். உலகெங்கிலும் மக்கள் இரவு பகல் கால நேரம் பார்க்காமல் அடிமையாகக் கிடக்கும் பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டன. பிரிட்டிஷ் புலனாய்வு செய்தி நிறுவனம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இந்தத் தகவல் திருட்டைப்பற்றி ஒளிபரப்பியபோது உலகமே அதிர்ந்தது.   50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திரட்டப்பட்டு கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா என்ற நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. விற்கப்பட்ட அந்தத் தகவல்கள் குறிப்பாக 2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது பயன்படுத்தப்பட்டது.  என்ன தலை சுற்றுகிறதா? இருங்கள் இன்னும் இருக்கிறது. 
 
 
சரி எப்படி இந்த பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டது. இங்கேதான்  அலெக்ஸாண்டர் கோகன் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. கோகன், ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றவர். அடிப்படையில் மனநல ஆலோசகரான  அவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்தவர். அவர் ஆய்வின் தலைப்பு ‘சமூக வலைதளங்களிலிருந்து தகவல்களை திரட்டுதல்.’ அதேதான். கடந்த 2014ஆம் ஆண்டு பேஸ்புக்கில் ஒரு செயலியை நிறுவினார் கோகன். அந்தச் செயலியைப் பயன்படுத்திய அத்தனை வாடிக்கையாளர்களின் தகவல்களும் சேகரிக்கப்பட்டது. செயலி வழியாகப் பெற்ற 50 மில்லியன் பயனர்களின் தகவல்களை கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா என்னும் நிறுவனத்திற்கு கோகன் விற்றார். தகவல்களைப்பெற்ற கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா அதை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்குப் பயன்படுத்தியது. ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக மக்கள் இருப்பதைப் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க அது பயன்படுத்தப்பட்டது. டொனால்ட் ட்ரப்பும் தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டார்.  
 
 
இந்த தகவல் திருட்டை நிகழ்த்தக் காரணமாக இருந்த கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் கிரிஸ்டோபர் வைல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர்தான்,  ‘இது ஒரு பெரிய விஷயம் இல்லை என்றும், பேஸ்புக்கின் விதிமுறைகளை மீறுவதாக ஆகாது என்று தன்னைத் தூண்டியதாகவும்’ நேர்காணல் ஒன்றில் அலெக்ஸாண்டர் கோகன் கூறியுள்ளார். ஆனால் இந்தத் தகவல் திருட்டு விஷயத்தில் தான் கருப்பு ஆடாக சித்தரிக்கப்படுவதாக அலெக்ஸாண்டர் கோகன் கூறியுள்ளது இன்னொரு ஹைலைட்.   
 
 
பேஸ்புக் தகவல் திருட்டு விஷயம் வெளியானவுடன் பங்குச் சந்தையில் பேஸ்புக்கின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. வாட்ஸ் அப் செயலியை உருவாக்கியவர்களில் ஒருவரான ப்ரயன் அக்டன் ‘இது பேஸ்புக்கை விட்டு வெளியேறுவதற்கான நேரம்’ என்று டிவீட் செய்தார். பின்னர் இது டிவிட்டரில் டிரெண்டானது. ஆனால் பேஸ்புக் நிறுவனரான மார்க் ஸுக்கர்பெர்க்  இரண்டு நாள் கழித்துதான் திருவாய் மலர்ந்தார்.  கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மூலம் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட அவர் மன்னிப்பும் கேட்டார். மக்கள் பேஸ்புக் மீது வைத்திருந்த நம்பிக்கையில் விழுந்த ஓட்டை இது என்றார். கோகனையும், கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தையும் சாடிய அவர் பேஸ்புக்கின் விதிமுறைகளை இருவருமே மீறிவிட்டார்கள் என்று விளாசித்தள்ளினார்.  இனி இது போன்ற சம்பவங்கள் நிகழாது என்று உறுதியளித்த அவர் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் வருங்காலத்தில் பத்திரமாகப் பாதுகாக்கப்படும் என்றார். பேஸ்புக்கில் நிறுவப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான செயலிகள் ஆராயப்படும் என்றும்,  இனி எந்த ஒரு செயலியும் மூன்று மாதங்களுக்கு மேல் வாடிக்கையாளர் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தால் அது நீக்கப்படும் என்றும் மார்க் ஸுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.  
 
 
பேஸ்புக் பற்றிய புகார் வெளியான உடனேயே தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் அமெரிக்காவில் நடைபெற்றதைப்போல  இந்திய துணைக்கண்டத்தில் நடந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பேஸ்புக்கை எச்சரித்தார். விஷயம் எந்த அளவுக்கு சீரியஸானது என்பதை அவரின் எச்சரிக்கை நமக்கு உணர்த்துகிறது.  ‘அடுத்த வருடம் இந்தியாவில், பிரேசிலில் தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே நாங்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவோம்’ என்று பதிலளித்திருக்கிறார் மார்க் ஸுக்கர்பெர்க். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று. 
 
 
விஷயம் இதோடு முடிந்துபோய்விடவில்லை!
 
 
 
- சரோ லாமா. 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...