???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எழில் மீது விக்ரம்பிரபு வருத்தம்!

Posted : புதன்கிழமை,   நவம்பர்   12 , 2014  01:12:47 IST

 
    எழில் இயக்கத்தில் இப்போது தயாராகியிருக்கும் படம் வெள்ளைக்காரதுரை. அந்தப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக படத்தின் விளம்பரவடிவமைப்புகளும் நடந்துகொண்டிருக்கின்றனவாம். முதற்கட்ட விளம்பரங்களில் விக்ரம்பிரபு, சூரி, ஸ்ரீதிவ்யா நடிக்கும் வெள்ளைக்காரதுரை என்று வடிவமைப்புச் செய்துவிட்டார்களாம். இந்த வடிவமைப்பைப் பற்றிக் கேள்விப்பட்டதும் விக்ரம்பிரபு வருத்தப்பட்டாராம். நான் நடித்த படங்கள் வரிசையாக வெற்றி பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதன காரணமாக நாள்தோறும் என்னைத் தேடிவருகிறவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது விக்ரம்பிரபு நடிக்கும் வெள்ளைக்காரதுரை என்று விளம்பரம் செய்தால் போதாதா? சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோரையும் விளம்பரங்களில் சேர்க்கவேண்டுமா என்று வருத்தப்பட்டிருக்கிறார். இந்தச் செய்தி இயக்குநர் எழிலுக்கும் தெரிந்து விட்டதாம். கதாநாயகனைப் பகைத்துக்கொள்ள முடியாதென்பதால் உடனே, இப்போது பலவகையான விளம்பரவடிவமைப்புகளைத் தயார் செய்து பார்த்துக்கொண்டிருக்கிறோம், இறுதியாக எதை வெளியிடுவதன்று முடிவு செய்வோம். அந்த இறுதி வடிவமைப்பை உங்களிடமும் காட்டிவிட்டுத்தான் வெளியிடுவோம் என்று சொல்லியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், கதைகள் கேட்பது படப்பிடிப்புக்குச் சரியாக வருவது, படப்பிடிப்புத்தளங்களில் படக்குழுவினருக்குச் சரியான முறையில் ஒத்துழைப்புக்கொடுப்பது எனப் பல விசயங்களில் நற்பெயரைப் பெற்றிருக்கும் விக்ரம்பிரபு விளம்பரவிசயங்களில் தலையிட்டு தன் பெயர் மட்டும் வரவேண்டும் என்று நினைக்கிறாரே இது சரியல்லையே என்று அவருக்கு வேண்டியவர்களே சொல்லிக்கொண்டிருக்கிறார்களாம்.  


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...