???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

படம்: எக்ஸ்ட்ராக்‌ஷன் -தோர் கையில் துப்பாக்கி!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஏப்ரல்   26 , 2020  01:40:40 IST


Andhimazhai Image
மார்வல் படங்களில் சுத்தியலுடன் தோன்றி எதிரிகளைக் கதிகலங்க அடிக்கும் தோர் கதாபாத்திர நடிகரான க்றிஸ் ஹெம்ஸ்வொர்த், சுத்தியலுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு துப்பாக்கியுடன் இறங்கி இருக்கும் படம்  ‘எக்ஸ்ட்ராக்‌ஷன்’. ஏற்கெனவே எம்.ஐ.பி பாகம் மூன்றில் க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் சுத்தியலுக்கு ஓய்வு கொடுத்திருந்தாலும் அதில் தோர் பாத்திரத்தின் சில சுவையான கூறுகள் இருக்கும். ஆனால் இந்த படத்தில் அதையெல்லாம் துடைத்துவிட்டு சுத்தமான ஆக்‌ஷன் ஹீரோவாகத் தோன்றுகிறார். படத்தின் தயாரிப்பும் அவரே.
 
படத்தின் இயக்குநர் சாம் ஹார்கிரேவ், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், டெல்பூல்-2, சூயிசைட் ஸ்குவாட் போன்ற படங்களில் சண்டைப்பயிற்சி அமைத்தவர். இது இவருக்கு முதல் படம். எண்ட்கேமில் கேப்டன் அமெரிக்கா காலத்தில் பின்னோக்கிப் பயணிப்பார். அங்கே  இன்னொரு கேப்டன் அமெரிக்காவுடன் அதாவது, தன்னுடன் தானே அவர் சண்டை போடும் காட்சி வரும். அதில் இன்னொரு கேப்டன் அமெரிக்காவாக ஸ்டண்ட் டபுள் வேடம் கட்டியவர் ஹார்கிரேவ்தான்.  படம் இயக்கும் ஆசையில் இருந்தவருக்கு இந்த கதையை சொன்னவர்கள் எண்ட்கேமின் இயக்குர்களான ரூஸோ சகோதரர்கள். அவர்களில் இளையவரான ஜோ ரூஸோதான் இந்த படத்துக்கு திரைக்கதையும். ரூஸோ சகோதரர்கள்தான் மார்வெலின் அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா படங்களின் இயங்குநர்கள்.
ஆகவே மார்வெல் திரைப் பிரபஞ்ச படக்குழுவினர் மீண்டும் ஒன்றிணைந்த படமாக எஸ்ட்ராக்‌ஷனைச் சொல்லிக்கொள்ளலாம்.
 
கதை மிக எளிமையானது. மும்பையில் ஒரு போதைக் கும்பல் தலைவனின் மகன் ஓவி என்ற சிறுவனை ( ருத்ராக்‌ஷ் ஜெய்ஷ்வால்) டாக்காவில் ஒரு சக்திவாய்ந்த இன்னொரு குழுத்தலைவன் கடத்துகிறான். மும்பை தலைவன் ஜெயிலில் இருப்பதால் அவனுடைய ஆள் சாஜுவிடம் (நடிகர் ரந்தீப் ஹூடா) பையனை மீட்கும் பொறுப்பு அளிக்கப்படுகிறது. இந்த வேலைக்கு டைலர் ரேக்ஸ் (கிறிஸ்ஹெம்ஸ்வொர்த்) என்கிற கூலிப்படை ஆளைப் பிடிக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் இருக்கும் இவர் காசு கிடைக்கும் என்ற நோக்கில் களமிறங்குகிறார். ஆனால் ரந்தீப் ஹூடாவிடம் காசு கிடையாது. பணம் கொடுக்காமல் வழியிலேயே பையனை டைலரிடம் இருந்து அடித்துக்கொண்டு போய்விடலாம் என்று பார்க்கிறார்.
 
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் போதைக் குழு தலைவனோ சர்வ சக்தி வாய்ந்தவனாக இருக்கிறான். டாக்காவில் இருக்கும் எல்லா வழிகளையும் அரசாங்க ஆட்கள் துணையுடன் மூடிவிடுகிறான். இப்போது எப்படி பையனைக் கொண்டுபோவது?
 
ஓவியை  அடைத்துவைத்த இடத்தில் இருந்து அடியாட்களைத் துவம்சம் செய்து மீட்டுவரும் டைலருக்கு பணம் கிடைக்காது என்று தெரிந்துவிடுகிறது. ஓவியை அங்கேயே விட்டுவிட்டு அவனை மட்டும் தப்பிச் செல்லச் சொல்கிறார்கள். ஹீரோவோ மறுக்கிறான். அவனுக்கும் பையனுக்கும் இடையே அழகான பாசப்பிணைப்பு உருவாகிறது. அவனை மீட்க தன் உயிரையே பணயம் வைக்கிறான். ஓர் ஆற்றின் மீது  பெரிய பாலம். அதில் வங்கதேச ராணுவத்துடன் கடும் சண்டை. அதில் கடைசியாக டைலரை போதைகும்பலின் ஒரு சிறுவன் சுட்டுவிட, அவன் தலைகுப்புற தண்ணீருக்குள் விழுந்து உயிரை விடுகிறான்.
 
படம் முழுக்க துப்பாக்கிகள் ஓயாமல் வெடிக்கின்றன. ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இடை இடையே சின்ன சின்ன எமோஷனல் இடைவெளிகள் ஆசுவாசப்படுத்துகின்றன. சுவாரசியமான  ஆக்‌ஷன் படம். ரெய்டு போன்ற சண்டைப்படங்களின் ரசிகர்கள் தவறவிடவேண்டாம்.
ஆனால் விமர்சன ரீதியாகப் பார்த்தால் வெள்ளைக்காரன் ஒருவன் மூன்றாம் உலக ஆசிய நாட்டுக்குள் புகுந்து கூலிக்கு வேலை செய்யும் ராணுவ வீரர்களையும் போதைக் கும்பலையும் சுட்டுத்தள்ளும் அதே மேற்கத்திய பார்வைதான். வங்கதேசம் என்பதால் சாகிற எல்லாரும் முஸ்லிம் வங்காளிகள். சுடுரா.. குத்துடா... என்று கேம்ஷோ போல் போய்க்கொண்டே இருக்கிறது என்பதையும் சொல்லவேண்டும். 
 
மார்வல் காரர்கள் என்பதால் போஸ்ட் ஸ்கிரிப்ட் மாதிரி காட்சிகள் இல்லாமல் இருக்குமா? எட்டு மாதம் கழித்து டைலரின் மீட்புக் குழுவில் இருக்கும் நிக் கான்( நடிகை கோல்ஷிப்டே பரானி) டாக்கா போதைகும்பல் தலைவனை சுட்டுக்கொல்கிறார். அதே சமயம் ஓவி ஒரு நீச்சல் குளத்தில் குதிக்கிறான். தண்ணீருக்குள் இருந்து எழுந்து வந்து பார்க்கும்போது மங்கலாக ஒரு உருவம் டைலர் போன்ற உருவம் நிற்கிறது! அத்துடன் படத்தை முடிக்கிறார்கள். அப்படியானால் ஆற்றில் விழுந்த டைலர் சாகவில்லையா? டைலரின் அறிமுகக்  காட்சியில் போதையில் தண்ணீருக்குள் தொபுக்கட்டீர் என குதித்து அதற்குள் மூச்சடக்கி உட்கார்ந்திருக்கும் காட்சியைக் காட்டுவார்கள். அப்படியானால் டைலர் பிழைத்துவிட்டானா? இயக்குநரைக் கேட்டால், “டைலர் சாகவேண்டும் என்று நினைத்தவர்கள் அவன் செத்துவிட்டதாக வைத்துக்கொள்ளலாம். அவன் இறக்கவேண்டாம் என்று நினைப்பவர்களும் இந்த காட்சியின் மூலம் திருப்தி அடையலாம்” என்று சொல்லி இருக்கிறார். ஆள் கெட்டிக்காரர்! டைலரை இன்னொரு படத்திலும் பார்க்கலாம் போலிருக்கிறது! இந்த இடத்தில் க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் ரசிகர்கள் ஹைய்யா இன்னொரு படமா? என்றும் ஆக்‌ஷன் படங்களையே பிடிக்காதவர்கள் அய்யோ இன்னோரு படமா? என்று சொல்லவேண்டும் என்பது விதி.
 
இந்த படம் நெட்ப்ளிஸ் ரிலீஸ்.
 
 
-யெம்யெம்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...