???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆயிரத்து ஐநூற்று பதினாறு தோட்டாக்கள்!

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   13 , 2019  03:15:07 IST


Andhimazhai Image

 

 

இது ஏப்ரல் 13ம் தேதி. அவர்கள் இன்னமும் அமிர்தசரஸில் இருக்கிறார்கள்.  “இந்த வேலை இன்னும் முடியவில்லை,” ஆதாம் அசிஸ், நசீமிடம் சொன்னார். “நான் போகமுடியாது அவர்களுக்கு திரும்பவும் மருத்துவர்கள் தேவைப்படலாம்,”

 

“ ஆக நாம் இங்கேயே உட்கார்ந்து உலகம் முடியும் வரை காத்திருக்க வேண்டுமா?”

 

 அவர் மூக்கை தேய்த்துக் கொண்டார்.  “ரொம்ப நேரம் தேவைப்படாது என்று நினைக்கிறேன்”

 

அன்று மாலை தெருக்களில் திடீர் என்று நிறைய மக்கள். டையர் கொண்டுவந்த புதிய ராணுவ சட்ட திட்டங்களை எதிர்த்து எல்லோரும் ஒரே திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

 

“ ஏதோ பொதுக்கூட்டம் ஏற்பாடு ஆகி இருக்க வேண்டும். இதில் ராணுவம் பிரச்சனை செய்யக்கூடும் அவர்கள் பொதுக்கூட்டங்களை தடை செய்துள்ளார்கள்,” என்கிறார் ஆதாம், மனைவி நசீமிடம்.

 

“ நீங்கள் ஏன் போகவேண்டும்? அழைக்கும் வரை காத்திருக்க கூடாதா?”

 

.. ஒரு மைதானம் என்பது காலியிடமாகவோ பூங்காவாகவோ எதுவாகவும் இருக்கலாம். அமிர்தசரஸில் இருந்த பெரிய மைதானம் ஜாலியன் வாலாபாக் என்று அழைக்கப்பட்டது. அதில் புற்கள் இல்லை. கற்கள், கேன்கள், கண்ணாடிகள் எங்கும் சிதறிக்கிடக்கும். இரு கட்டடங்களுக்கு இடையிலான குறுகலான சந்து வழியாக நடந்து சென்றால்தான் இதற்குள் நுழைய முடியும். ஏப்ரல் 13-ஆம் தேதி  ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இந்த சந்துவழியாக உள்ளே கூடுகிறார்கள்.” இது ஒரு அமைதியான போராட்டம்,” யாரோ மருத்துவர் அசீஸிடம் சொல்கிறார்கள். கூட்டத்தால் தள்ளப்பட்டு அவர் அந்த சந்தின் வாய்ப்பகுதிக்கு வருகிறார். ஹெய்டல்பெர்க் மருத்துவப் பை அவரது கையில் உள்ளது.(இதற்கு எந்த க்ளோஸ் அப்பும் வேண்டாம்.) எனக்குத் தெரிகிறது, அவர் அச்சத்தில் இருக்கிறார். ஏனெனில் எப்போதையும் விட அவரது மூக்கு மிக மோசமாக அரிக்கிறது. ஆனால் அவர் பயிற்சி பெற்ற மருத்துவர் என்பதால் அந்த எண்ணத்தை மனதை விட்டு அகற்றி, மைதானத்தில் நுழைகிறார். யாரோ உணர்ச்சிகரமாக உரையாற்றிக்கொண்டிருக்கிறார்கள். சுண்டலும் இனிப்பும் விற்பவர்கள் கூட்டத்துக்கு நடுவே செல்கிறார்கள். காற்றில் தூசு பறக்கிறது. என் தாத்தா பார்த்தவரை கூட்டத்தில் ரவுடிகளோ, பிரச்னை செய்கிறவர்களோ இல்லை. ஒரு சீக்கியக் குழு தரையில் துணியை விரித்து சுற்றிலும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது. காற்றில் கழிவின் கெட்டவாடை வீசுகிறது. அசிஸ் கூட்டத்தைத் துழாவிப் பார்க்கிறார். சந்தின் நுழைவாயில் வழியாக பிரிகேடியர் ஆர்.இ. டையர் வருகிறார். அவரை பின்தொடர்ந்து ஐம்பது அதிரடிப் படையினர் வருகிறார்கள். அவர் அமிர்தசரஸின் ராணுவ சட்டத் தளபதி. மிக முக்கிய மான ஆள். அவரது மெழுகு தடவப்பட்ட மீசையின் முனைகள் முக்கியத்துவத்துடன் உறுதியாக இருக்கின்றன. அந்த ஐம்பத்தியோரு பேரும் சந்து வழியாக நடைபோட்டு வருகையில் என் தாத்தாவின் மூக்கில் இருந்த அரிப்பு, ஒரு தூண்டுதலாக மாறுகிறது. ஐம்பத்தியோரு பேரும் மைதானத்தில் நுழைந்து தங்கள் இடங்களில் நிற்கிறார்கள். டையருக்கு வலதுபக்கம் 25 பேர், இடது பக்கம் 25 பேர்.; ஆடம் அசீஸ் மூக்கில் ஏற்பட்ட நமைச்சல் தாங்க முடியாத அளவு அதிகரித்ததால் அவர் தன்னைச் சுற்றிலும் நடக்கும் செயல்களில் கவனம் செலுத்தவில்லை. பிரிகேடியர் டையர் கட்டளை இடும்போது, என் தாத்தாவின் மூக்கில் பெரிய தும்மல் ஏற்படுகிறது. ‘யாஆஆஅக்- தூஊஊஉ… அவர் தும்முகிறார். நிலை தடுமாறி தன்  மூக்கைப் பின் தொடர்ந்து முன்னால் விழுகிறார். அதன் மூலம் தன் உயிரையும் காத்துக்கொள்கிறார். அவரது மருந்துப் பை விழுந்து திறந்துகொள்கிறது. புட்டிகள், தைலங்கள், ஊசிகள் மண்ணில் சிதறுகின்றன. அவர் கூட்டத்தின் காலடியில் தன் பொருட்களை, அவை நசுங்குவதற்குள், காத்துக்கொள்ள வேகவேகமாக தடவித் தேடிக்கொண்டிருக்கிறார். குளிர்காலத்தில் பற்களை நடுங்கிக் கடிப்பதுபோல் ஒரு சத்தம். யாரோ அவர் மீது விழுகிறார்கள். அவரது சட்டை மீது சிவப்பு படிகிறது. இப்போது அலறல்களும் அழுகுரல்களும் கேட்கின்றன. ஆனாலும்  பற்களைக் கடிக்கும் வினோத ஒலி தொடர்கிறது. மேலும் மேலும் மனிதர்கள் தடுமாறி என் தாத்தா மீது விழுகிறார்கள். முதுகு உடைந்துவிடுமோ என அவர் அஞ்சுகிறார். அவரது பையின் பிடி அவரது நெஞ்சில் அழுத்துகிறது. அதனால் கீறல்கள் ஏற்படுகின்றன. இந்த கீறல் தீவிரமாக உள்ளது. அவர் சங்கராச்சார்யா அல்லது தக்ட்- இ –சுலைமான் மலையில் பின்னாளில் மரணம் அடையும்வரை இந்த தழும்பு மறையாமல் இருந்தது. அவரது மூக்கு சிவப்பு மாத்திரைகள் கொண்ட பாட்டிலில் மோதி நசுங்கியது. பற்கடிக்கும் ஓசை நிற்கிறது. அதற்குப் பதிலாக மக்களின் அழுகுரல்களும் பறவைகளின் ஓசையும் கேட்கிறது. எங்கும் வண்டி நகரும் ஓசையோ எதுவுமோ இல்லை. பிரிகேடியர் டையரின் ஐம்பது படைவீரர்களும் எந்திரத் துப்பாக்கிகளை கீழே வைத்துவிட்டுச் செல்கிறார்கள். ஆயுதமற்ற கூட்டத்தை நோக்கி ஆயிரத்து அறுநூற்றி ஐம்பது தோட்டாக்களை அவர்கள் சுட்டிருக்கிறார்கள். இதில் ஆயிரத்து ஐநூற்று பதினாறு தோட்டாக்கள் ஆட்களைக் கொன்றும் காயப்படுத்தியும் தங்கள் இலக்குகளை அடைந்திருக்கின்றன. ”நன்றாக சுட்டீர்கள்,’ டையர் தன் ஆட்களிடம் சொல்கிறார். ‘’நாம் மகிழ்வான நல்ல வேலையைச் செய்துள்ளோம்’’

 

(சல்மான் ருஷ்டி எழுதிய ’மிட் நைட்ஸ் சில்ட்ரன்’ நாவலில் ஒரு பகுதி. தமிழில்: மதிமலர்)

 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...