???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

செய்தியாளர்களை சந்திக்க எப்போதும் அஞ்சியதில்லை: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   18 , 2018  23:23:13 IST

செய்தியாளர்களை சந்திப்பதற்கு அஞ்சும் பிரதமராக தான் இருந்ததில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளித்துள்ளார்.
 
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய "மாறிவரும் இந்தியா" என்ற தலைப்பிலான சுயசரிதை புத்தகம் டெல்லியில் வெளியிடப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய மன்மோகன்சிங், பிரதமர் பதவிக்கு மட்டுமன்றி, கடந்த 1991-ம் ஆண்டில் நிதியமைச்சராகவும் திடீரென வந்ததாக தெரிவித்தார். நிதியமைச்சராக பதவியேற்றதைத் தொடர்ந்து, நாட்டில் நிலவிய நெருக்கடியை சமாளித்து மிகப்பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்தியதாக பெருமிதம் தெரிவித்தார். தன்னை செயல்படாத பிரதமர் என்று பலரும் கூறியபோதும், செய்தியாளர்களை சந்திக்க அஞ்சியதில்லை என்று அவர் கூறினார். இதனை இந்தப் புத்தகம் வெளிப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
 
ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்புநீக்க நடவடிக்கை மூலம், நாட்டின் பொருளாதாரத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அழித்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். எனினும், அனைத்து தடைகளையும் தாண்டி, உலகின் சிறந்த பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று மன்மோகன்சிங் நம்பிக்கை தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...