அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   13 , 2021  20:15:13 IST

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைபாட்டின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மன்மோகன் சிங், 1991-ம் ஆண்டில் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது இந்தியாவில் தாராளமயக்கொள்கைகளை அறிமுகப்படுத்தியவர். அதன் பிறகு, 2004-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது யாரும் எதிர்பாராதவிதமாக மன்மோகன் சிங் பிரதமராக்கப்பட்டார். அவர், தொடர்ந்து 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.
 
தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்துவருகிறார். இந்தநிலையில் இன்று திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதயவியல் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருந்தபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். 2009-ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு இதயஅறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...