செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவேரா திடீரென உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது.…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்
Posted : வியாழக்கிழமை, மார்ச் 16 , 2023 10:14:26 IST
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவேரா திடீரென உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. அதனையடுத்து, அந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் திருமகனின் தந்தையும் காங்கிரஸின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். அ.தி.மு.க சார்பில் தென்னரசு போட்டியிட்டார். தி.மு.க ஆதரவுடன் களமிறங்கிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தென்னரசு விட 66,000-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதனையடுத்து, எம்.எல்.ஏவாக பதவியேற்றார்.
இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார். நெஞ்சு வலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இவருக்கு இதயவியல் நிபுணர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர் எனவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் நெஞ்சு வலி காரணமாக ICUவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது வரை உடல் நலத்துடன் உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தகவலளித்துள்ளது. மேலும் 6 வது மாடியில் ஐசியூ வில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மீண்டும் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் வர உள்ளதாகவும், அவர்கள் வந்த பிறகு அவர் உடல் நலம் குறித்து தகவல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|