செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
'ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய்' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
'ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய்' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Posted : புதன்கிழமை, ஜனவரி 06 , 2021 12:14:47 IST
அதிமுக அரசு செய்யாத பணியில் ஊழல் செய்வதாக ஸ்டாலின் குறை கூறி வருகிறார். போடாத சாலையில் எப்படி ஊழல் செய்ய முடியும்? ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை செய்துவரும் முதல்வர் இன்று பவானியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, "மக்கள் சபை கூட்டம் நடத்தி ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார்?; நாடாளுமன்ற தேர்தலின்போது மக்களிடம் மனுக்களை பெற்ற மு.க.ஸ்டாலின் என்ன செய்தார்? என்றும் முதல்வர் கேள்வி எழுப்பினார்.
மேலும், கிராம சபை கூட்டத்தின் மூலம் ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருகிறார். அரசு, முதலமைச்சரை குறை சொல்வதே அவரது வழக்கம் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
|
|