???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் 0 CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் 0 தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி! 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு! 0 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' 0 டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு! 0 முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு 0 டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது! 0 டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத்! 0 சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி 0 கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் 0 கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ 0 பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் 0 கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் 0 நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எல்லாம் செல்லாத நோட்டுகள்: “10 வருஷ உழைப்பு வீணாப்போச்சுங்க’’... கதறும் மூதாட்டிகள்...

Posted : புதன்கிழமை,   நவம்பர்   27 , 2019  04:59:36 IST


Andhimazhai Image
திருப்பூரைச் சேர்ந்த இரு மூதாட்டிகளின் பத்து ஆண்டு சேமிப்பு முழுவதும் பணமதிப்பிழப்பால் பயனில்லாமல் சென்றுள்ளது தெரிய வந்திருக்கிறது.
 
 
எழுபத்து ஐந்து வயதாகும் ரங்கம்மாளும் 72 வயதாகும் தங்கம்மாளும் சகோதரிகள். இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள பூமலூர் பகுதியில் தனியாக வாழ்ந்து வருகின்றனர். ரங்கம்மாளுக்கு ஏழு குழந்தைகளும், தங்கமாளுக்கு 6 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி வெவ்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர். 
 
 
ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த தங்கமாள் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம்  சிகிச்சை பெற்று வந்தார். தனது மருத்துவச் செலவுக்காக சிறு தொகை சேமித்து வைத்திருக்கிறேன் என்று அவரது பிள்ளைகளிடம் கூறியிருக்கிறார். ஆனால் அந்த பணத்தை பார்த்த பிள்ளைகள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். அவர் சேமித்து வைத்திருந்தது ரூ 24,000.  
 
 
ஆனால் இது எல்லாம் பழைய  500,1000 ரூபாய் நோட்டுகள். இதைத்தொடர்ந்து அக்கா ரங்கம்மாளிடம் இதுபோன்று சேமிப்பு இருக்கிறது என்று தங்கம்மாள் கூறியிருக்கிறார்.ஆனால் உஷாரான ரங்கம்மா முதலில் தன்னிடம் எந்த சேமிப்பும் இல்லை என்று மறுத்துவிட்டார். 
 
 
ஆனால் சில நாட்களுக்கு முன்பு கண் அறுவை சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு புறப்படுவதற்கு முன்பு தன்னிடம் இருக்கும் ரூ 22,000 சேமிப்பை பற்றி மகன் செல்வ ராஜிடம் கூறினார். ஆனால் அதுவும் செல்லாத பணம் என்பது அந்த மூதாட்டிக்குத் தெரியவில்லை!
 
 
மணமதிப்பிழப்பு தொடர்பான செய்தியை மகன்  அம்மாவிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர்கள் நம்பவில்லை. “அவர்கள் எவ்வளவும் சேமித்து வைத்திருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க நான் அப்படி கூறினேன் என்று நினைத்துவிட்டார்கள்.
 
 
 பூமலூரில் உள்ள கடைகளில் அவர்கள் ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளனர். கடைக்காரர்கள் இது செல்லாது என்று கூறியிருக்கின்றனர். அதன் பிறகே நம்பினர். அவர்கள் சேமித்து வைத்த எல்லாம் வீணாகிவிட்டது’’ என்று கூறுகிறார் அவர். பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானது 2016 நவம்பர் மாதம். மூன்று ஆண்டுகள் கழித்தும் அதன் அதிர்வுகள் ஓயவில்லை! இந்த மூதாட்டிகளைப் போல் எத்தனை பேரோ?
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...