![]() |
எ.வ.வேலு வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!Posted : வியாழக்கிழமை, மார்ச் 25 , 2021 18:46:58 IST
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ. வேலுவின் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளை மற்றும் உறவினர் வீடுகள் என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர் எ.வ.வேலுவின் சொந்த கிராமமான கூடலூர் கிராமத்தில் உள்ள அவரது வீடு, உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு என பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. அதேபோல், எ.வ. வேலுக்கு சொந்தமான அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கம்பன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, ஜீவா வேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிராணைட் ஃபேக்டரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எ.வ.வேலுவின் வீட்டிலும் சோதனை நடத்தினர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
|
|