???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம்: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. 0 பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வாழ்க்கை குறிப்பு. 0 பேருந்து, ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் 0 சிறுவர்கள், மூத்த குடிமக்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைப்பு: 0 தமிழக அரசு மதுக்கொள்கையை மாற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. 0 போரூர் மேம்பாலம் 25ஆம் தேதி திறப்பு 0 பத்து லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: 0 வெளிநாட்டுக்கான தூதரக அதிகாரி முதல் மக்களவை சபாநாயகர் வரை - மீரா குமார் வாழ்க்கை குறிப்பு 0 ஜிஎஸ்டி யை அமல்படுத்துவதால் அனைத்து வரிகளும் குறையும்.- உர்ஜித் படேல் கருத்து 0 குடியரசுத் தலைவர் பதவி: பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று வேட்புமனு தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பில் சிபிஐ விசாரிக்க முடியாது: முதலமைச்சர் 0 எம்எல்ஏ,எம்பிக்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை 0 எதிர்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமார் அறிவிப்பு 0 7 பேர் விடுதலை எப்போது?: சட்ட அமைச்சர் பதில் 0 வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி- சி38!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும்'

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   16 , 2017  07:56:35 IST

போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திருப்ப வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த செந்தில்குமரைய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அரசு போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப உத்தரவிட வேண்டும் எனவும் அவ்வாறு பணிக்கு திரும்பவில்லை என்றால் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, அரசு போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ள நீதிமன்றம், உடனடியாக தொழிலாளர்கள் பணிக்கு திரும்பவில்லையென்றால் எஸ்மா சட்டத்தின் கீழ் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் யாராவது பேருந்து ஓடுவதை தடுக்க முயன்றால், அவர்களை எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...