???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மக்களே தலைவர்; நான் என்றும் தொண்டன்: எடப்பாடி பழனிசாமி

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மார்ச்   24 , 2019  22:42:10 IST

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து வேலூர் சத்துவாச்சாரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
அப்போது, முதலமைச்சருக்கு பெண்கள் கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர், கல்வி மற்றும் மருத்துவத்துறைகளில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
 
அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட அவர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2,000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்து தடுத்து நிறுத்தியுள்ளதாகவும், தேர்தலுக்கு பிறகு தகுதியானவர்களுக்கு 2,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
 
திமுக என்றால் ஊழல் கட்சி என்று அக்மார்க் முத்திரை குத்தப்பட்டு விட்டதாகக் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களை ஜாமினில் எடுக்க உதவியதால் திமுக மீது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இதனைத் தொடர்ந்து, அரக்கோணம் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் களமிறங்கும் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து ஆற்காடு பேருந்து நிலையம் பகுதியில் மாங்கனி சின்னத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...