???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு 0 ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல் 0 மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா! 0 நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு 0 சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை! 0 சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு 0 அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்துக்கு கமல் ஆதரவு 0 தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை 0 கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ப.சிதம்பரம் விமர்சனத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி பதிலடி!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   13 , 2019  18:41:23 IST

காங்கிரஸின் மூத்த நிர்வாகியும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், தான் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், “அதிமுக, பாஜக என்ன செய்தாலும் ஒப்புக் கொள்ளும். நாளைக்கே தமிழகத்தில் நடக்கும் தங்களது ஆட்சியைக் கலைத்தால் கூட அதிமுக அதை வரவேற்கும்” என்று கேலியாக பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்கு நீர் திறந்து வைத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது ஒரு நிருபர் ப.சிதம்பரத்தின் கருத்து பற்றி கூற, “ப.சிதம்பரம் எத்தனை ஆண்டு காலம் மத்திய அமைச்சராக இருந்தார். அவரால் நாட்டுக்க என்ன பயன். இந்த பூமிக்குதான் பாரம். அவர் என்ன திட்டம் கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளார். எவ்வளவு ஆண்டு காலம் நிதி அமைச்சராக இருந்தார்…

தேவையான நிதி கொடுத்தாரா, புதிய தொழிற்சாலைகள் அமைத்தாரா, புதிய திட்டங்கள் கொண்டு வந்தாரா, காவிரி நதி நீர் பிரச்னையைத் தீர்த்தாரா, முல்லைப் பெரியாறு பிரச்னையைத் தீர்த்தாரா, பாலாறு பிரச்னையைத் தீர்த்தாரா. அவருக்கு அவரது சுயநலம்தான் முக்கியம். நாட்டுப் பிரச்னையைப் பற்றி அவருக்கு என்னாளும் அக்கரை இருந்தது கிடையாது.

எனவே, அவரது பேச்சைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் அவரை ஏற்கெனவே நிராகரித்துவிட்டனர். அவருக்கு அதிகாரம் தேவை. அதற்காக எதையாவது பேசிக் கொண்டிருப்பார். நான் முதல்வராக இருந்து எத்தனை முறை மக்களை சந்திக்கிறேன். அவர் மக்களை சந்திக்கிறாரா. எந்த மக்களை அவர் சந்திக்கிறார். மத்திய அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் கூட எத்தனைத் திட்டங்களை புதியதாக அறிவித்தார். எத்தனை முறை தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்” என்று தொடர் கேள்விகளை எழுப்பினார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...