அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழ்த்தாய் வாழ்த்து: கலைஞர் திருத்தியது செல்லும் - நீதிமன்றம்! 0 பஞ்சாப் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக! 0 இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு 288 ரன்கள் வெற்றி இலக்கு! 0 ஹைதராபாத்: ராமானுஜரின் பிரமாண்ட சிலையை திறந்து வைக்கும் பிரதமர்! 0 தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு! 0 அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் - அமைச்சர் பொன்முடி 0 வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று! 0 தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான -2வது ஒருநாள் ஆட்டம்: டாஸ் வென்ற இந்திய அணி! 0 வேலையிலிருந்து தப்பிக்க இப்படி எல்லம் செய்ய முடியுமா? 0 டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு சிலை - பிரதமர் மோடி 0 சாய்னா நேவால் குறித்து அவதூறு பேச்சு; நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் 0 நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று! 0 தமிழ்நாட்டில் 7 இடங்களில் அடுத்த மாதம் அகழாய்வு பணி தொடக்கம்: மு.க.ஸ்டாலின் 0 3வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கைகள் குறைவு: மத்திய அரசு 0 யூடியூபை ஏன் தடை செய்யக் கூடாது? நீதிமன்றம் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்!

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   06 , 2021  06:24:44 IST

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி திரும்பியபோது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக புகார் அளிக்கப்பட்டது. அமமுக பொறுப்பாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
 
உறுதிமொழி ஏற்றப் பின்னர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கார்களில் புறப்பட்டு சென்றனர். அப்போது, எடப்பாடி பழனிசாமி காரை சிலர் முற்றுகையிட்டு சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். மேலும், கற்கள், காலணி ஆகியவற்றை காரின் மீது வீசி தாக்குதல் நடத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது.
 
இது தொடர்பாக அதிமுகவின் அம்மா பேரவை துணை செயலாளர்  மாறன் என்பவர் மெரினா கடற்கரையில் புகார் அளித்துள்ளார். புகாரில், எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை சூழ்ந்துகொண்டு அமமுகவினர் தாக்குதல் நடத்தினர் என்றும் எடப்பாடி பழனிசாமியை கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும் தெரிவித்துள்ளார். அமமுக பொறுப்பாளர் மீது இந்த தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...