???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

111 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   11 , 2018  23:52:29 IST

கங்கை நதியின் குறுக்கே உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் 111 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த முன்னாள் ஐஐடி பேராசிரியரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சுவாமி ஞானஸ்வரூப் சனந்த் உயிரிழந்தார்.
 
ஐஐடியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவரான சுவாமி ஞானஸ்வரூப் சனந்த் கங்கை நதியை தூய்மைபடுத்த வேண்டும், நதியின் பாதையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மைத்ரி சதான் ஆசிரமத்தில் கடந்த 111 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருந்தார்.
 
 அவர் வலுக்கட்டாயமாக ஆசிரமத்தில் இருந்து தூக்கிவரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல் ஞானஸ்வரூப் சனந்த் உயிரிழந்தார். கங்கை நதியின் குறுக்கே அமைக்கப்படும் மின் திட்டங்களை கடுமையாக எதிர்த்து வந்த சனந்த், கங்கை பாதுகாப்பு மற்றும் மேலாண்மை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
 
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கங்கை நதி வாரிய உறுப்பினராக இருந்த ஞானஸ்வரூப் சனந்த், 2010-ம் ஆண்டில் பகிராதி நதியின் குறுக்கே அமைக்க திட்டமிடப்பட்ட மின் திட்டத்தை எதித்து 38 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவரது போராட்டத்தை அடுத்து, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
 
2011-ம் ஆண்டில் கங்கை நதியின் குறுகே உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன், சுவாமி நிகமானந்த் என்பவர் 2 மாதமாக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...