அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

எண்ணித்துணிக: திரைவிமர்சனம்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   05 , 2022  21:42:05 IST


Andhimazhai Image

பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தைக்  கைப்பற்றத் துடிக்கும் குழுக்களுக்கு இடையேயான போட்டியில் அப்பாவிகள் பலிகடா ஆவதே  'எண்ணித்துணிக' திரைப்படம்.


அமெரிக்காவைச் சேர்ந்த தாதா ஒருவர் வாங்க விரும்பிய வைரக்கற்களை தமிழ்நாட்டை சேர்ந்த அமைச்சர் ஒருவர் முந்திக் கொண்டு வாங்கிவிடுவார். அதை எப்படியாவது கைப்பற்ற விரும்பும் அமெரிக்க தாதா, சென்னையில் உள்ள கூலிப்படையினரின் உதவியை நாடுவார். வைரம் இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்துச் சென்று கொள்ளையடிக்கும் கூலிப்படையினர், காவலர் உள்ளிட்ட மூன்று பேரை கொன்றுவிடுவார்கள்.  இதில் பாதிக்கப்படுகிறார் நாயகன் ஜெய்.

கூலிப்படையினரைத் தேடிப்புறப்படும் நாயகன், தர்மத்தை நிலைநாட்ட என்னென்ன சாகசங்களை மேற்கொண்டார் என்பதே படத்தின் மீதிக் கதை.


விதவித விதமாக கொள்ளைப்படிப்பது எப்படி என பல திரைப்படங்கள் தமிழிலேயே வந்திருப்பதால் எண்ணித்துணிக புதுமையாக இல்லை. யூகிக்கூடிய அளவிற்கான திரைக்கதை உருவாக்கம் படத்திற்கு பெரும் பலவீனம். அதோடு பல லாஜிக் ஓட்டைகள். இயக்குநர் எஸ்.கே. வெற்றிச்செல்வன் இதில் மட்டும் சறுக்கவில்லை. கதாபாத்திர உருவாக்கத்திலும் கோட்டைவிட்டிருக்கிறார். நாயகியின் பாத்திர உருவாக்கம் அபத்தமோ அபத்தம். மெரினா போராட்டத்தில் பிரபலமான ஜூலியை நினைவுப்படுத்துகிறது. வம்சி கிருஷ்ணாவின் நடிப்பு மட்டுமே ஆறுதல். ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் காட்டிய ஜெய் எமோஷன் காட்சிகளில் குறைவான நடிப்பையே வழங்கியுள்ளார்.


சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசை திரைப்படத்தைப் பரபரப்பாக்குகிறது. த்ரில்லர் படத்திற்குத் தேவையான இசையைக் கொடுத்தவர், பாடல்களில் கோட்டைவிட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளர் தினேஷ்குமார், படத்தொகுப்பாளர் சாபு ஜோசப் படத்திற்கு என்ன தேவையையோ அதை சிறப்பாகவே வழங்கியுள்ளனர்.


“நீ என் இல்லத்தரசியில்லை; இதயத்தரசி” என்ற வசனத்திற்கு விசில் பறந்தது அரங்கத்தில். அரசியல்வாதி என்றாலே, திருமணத்தைத் தாண்டிய உறவில் இருப்பார், காதலி என்றால் முரண்டுபிடிப்பவர், மாமனார் என்றால் பெண் தர மறுப்பார், அப்பா என்றால் கண்டிப்புடன் அன்பு காட்டுவார் என்பது போன்ற வழக்கமான காட்சிகளை தமிழ் சினிமாக்காரர் கைவிடும் நாளே நமது பொன் நாள்!.


எண்ணித்துணிக… இன்னும் கொஞ்சம் துணிந்திருக்கலாம்!

 

-தா.பிரகாஷ்



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...