???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம்: 5,835 பேருக்கு புதிதாக கொரோனா; 119 பேர் பலி 0 கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்: கு.க. செல்வம் 0 உடுமலை சங்கர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு 0 நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: தேசிய தேர்வு முகமை 0 ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே: ஓ.பி.எஸ் அறிவுரை 0 மக்களுக்கு புரியும் மாநில மொழிகளில் EIA 2020 வரைவை வெளியிடுங்கள்: பார்வதி 0 1947லிருந்து நாடு காணாத சரிவு காணலாம்: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி 0 எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர்: ஆர்.பி.உதயகுமார் 0 ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: ஜெயக்குமார் 0 தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்: தலைமை செயலாளர் 0 ஜெ. இல்லத்தை நினைவு இல்லமாக்குவது கொள்கை முடிவு: தமிழக அரசு 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அடுத்த கல்வியாண்டு முதல் ஆந்திர அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   05 , 2019  22:32:45 IST

ஆந்திர பிரதேச அரசாங்கத்தின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆந்திர பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகள், மண்டல் பரிஷத் பள்ளிகள் மற்றும் ஜில்லா பரிஷத் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் ஆங்கில வழி கல்வியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வரும் 2020௨1 ஆம் கல்வி ஆண்டில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையும், அதற்கடுத்ததாக 2021௨2 ஆம் கல்வி ஆண்டில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கும் ஆங்கில வழி கல்வி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பள்ளி கல்வி ஆணையத்திற்கு ஆந்திர அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு பள்ளிகளில் தெலுங்கு அல்லது உருது மொழிப்பாடம் கட்டாயப்பாடமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் பாடம் நடத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாகவும், ஆங்கில புலமைக்கான தேர்வுகளின் அடிப்படையில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...